‘பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத ஊரே வேடிக்கை பார்க்குது’.. நெட்டிசன்ஸ் வாய்க்கு அவல் கிடைச்சிடுச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா - கஸ்தூரி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : கஸ்தூரியிடம் மல்லுக்கட்டும் வனிதா- வீடியோ

சென்னை: இன்றைய இரண்டாவது புரொமோவின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா - கஸ்தூரி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு வனிதா மீண்டும் வந்ததில் இருந்தே சண்டையும் சச்சரவுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போதாக்குறைக்கு கஸ்தூரியும் இருப்பதால், பிக் பாஸ் வீடே சந்தைக்கடை போல் தான் இருக்கிறது.

வனிதா, கஸ்தூரி, சேரன் ஆகிய மூவரும் சேர்ந்து, பாய்ஸ் கேங்கை உடைக்க சதி திட்டம் தீட்டினர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி, தற்போது வனிதாவும், கஸ்தூரியும் சண்டைப் போட்டு வருகின்றனர்.

லக்சுரி டாஸ்க்

லக்சுரி டாஸ்க்

நேற்றைய எபிசோடில், இந்த வார லக்சுரி பட்ஜெட்டுக்காக ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கஸ்தூரி ஆசிரியையாகவும், சேரன் தலைமை ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். வனிதா உள்ளிட்ட மற்றவர்கள் மழலையர் வகுப்பு மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வாத்து வனிதா

வாத்து வனிதா

கஸ்தூரி பாடம் நடத்தும் போது வனிதாவை பார்த்து, "வாத்து, வாத்து பாடல் பாட வா", என்றழைத்தார். இதனால் கோபமடைந்த வனிதா கஸ்தூரியுடன் சண்டைக்கு போனார். நடுவில் சேரன் தலையிட்டதால் கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.

கலவரமான வீடு

கலவரமான வீடு

டாஸ்க் முடிந்த பின்னரும் இந்த விஷயம் குறித்து பாய்ஸ் கேங்குடன் கஸ்தூரி விவாதித்தார். அப்போதும் வனிதா கோபத்துடன் கஸ்தூரியிடம் சண்டைபோட்டார். இதனால் பிக் பாஸ் வீடு மீண்டும் கலவரமானது.

முதல் புரொமோ

முதல் புரொமோ

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் எந்த பிரச்சினையும் காட்டப்படவில்லை. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பள்ளிக்கூட டாஸ்க்கில் ஜாலியாக ஈடுபட்டிருப்பது மட்டுமே காட்டப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிக் பாஸ் வீட்டில் இன்று எந்த பிரச்சினையும் இல்லையோ என நினைத்தார்கள்.

தப்புக்கணக்கு போடலாமா?

தப்புக்கணக்கு போடலாமா?

அதெப்படி நீங்கள் தப்புக்கணக்கு போடலாம் என நினைத்த பிக் பாஸ் அடுத்த புரொமோவிலேயே ரணகளப் படுத்திவிட்டார். நேற்றைய தினம் போலவே கஸ்தூரியும், வனிதாவும் இன்றும் சண்டைப்போட்டுக்கொள்கின்றனர். ஆனால் இன்று கஸ்தூரியும் வனிதாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

நாய் போல சண்டை

நாய் போல சண்டை

இது ஒருபுறம் இருக்க, வெளியில் கார்டன் ஏரியாவில் சேரன், சாண்டி, லாஸ்லியா என அனைவரும் விதவிதமாக நாய் போல குரைத்து விளையாடுகின்றனர். பிக் பாஸ் எடிட்டர் இந்த இரண்டு காட்சிகளையும் கலந்து கட்டி புரொமோ உருவாக்கியுள்ளார். எனவே இன்றைய எபிசோடில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

நெட்டிசன்ஸ் ஹேப்பி

சும்மாவே பிக் பாஸ் வீட்டில் எது நடந்தாலும் அதை வைத்து நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கி விடுவர். அப்படி இருக்கையில் பிக் பாஸே இப்படி பாயிண்ட் எடுத்துக் கொடுத்தால் விட்டு விடுவார்களா. நாய்க்கும் நாய்க்கும் சண்டை எனப் போடாமல், மறைமுகமாக, காஞ்சனா பட டயலாக்கை வைத்து ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. அதை ஊரே வேடிக்கை பார்க்குது' என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X