Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கவின் மேல கைய வச்சா லாஸ் கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா.. தேவையில்லாம சீண்டி விட்டுட்டீங்களே மது!
பிக் பாஸ் இரண்டாவது புரொமோவில் மதுமிதாவை லாஸ்லியா எச்சரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
சென்னை: கவினைப் பற்றி தப்பாக பேசியதால் ஆவேசமடைந்த லாஸ்லியா, மதுவுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பிக் பாஸ் புரொமோவில் இடம் பெற்றுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோவில் கவினும், மதுமிதாவும் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை ஆண்கள் அடிமைப் படுத்துவதாக அவர் கோபமாகத் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது புரொமோவிலும் கவின், மது சண்டைக் காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் கூடுதலாக லாஸ்லியாவும் மதுவை எதிர்த்து சண்டை போடுகிறார்.
கவின் - மது சண்டை:
இந்தப் புரொமோவில் முகென் பிரச்சினையை சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பதாக கவின் கூறுகிறார். அதற்கு, ‘நீ என்னைத் தான் கூறுகிறாயா?' எனக் கேட்கும் மது, கூடவே ‘நாலு பொண்ணுங்களை ஏமாத்தி இந்த வீட்ல இருக்கணும்ங்கற அவசியம் எனக்கில்லை' என கத்துகிறார்.
எச்சரிக்கை:
இந்தப் பிரச்சினை அங்கு போய்க் கொண்டிருக்கும் போதே, அங்கு வருகிறார் லாஸ்லியா. கவின் பிரச்சினையில் தானும் சம்பந்தப் பட்டிருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிடம் அவர் கோபமாகப் பேசுகிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றும் விடுகிறார். ஆனால் இதுபோல் மற்ற யாரிடமும் அவர் எச்சரிக்கும் விதமாக ஆவேசமாகப் பேசியது இல்லை.
முதன்முறையாக ஆவேசம்:
பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் தனக்கான பிரச்சினைகளுக்காக மட்டும் தான் லாஸ்லியா தனது குரலை உயர்த்துகிறார். முன்பு மொட்டைக் கடுதாசி டாஸ்க்கின் போது அவர் கோபப்பட்டு பேசினார். ஆனால் இதுவரை எந்த சண்டையிலும் அவர் ஈடுபட்டதில்லை. எனவே முதன்முறையாக அவர் மதுவுடன் மோதி இருப்பது அவரது ஆர்மியை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
|
லாஸ்லியா ஆர்மி:
‘கவினைச் சொன்னா லாஸ்லியா சும்மா விட்ருவாங்களா' ‘நீ தேவையில்லாம தூங்குற சிங்கத்தை தட்டி எழுப்பிட்ட மது', ‘தேவையில்லாம லாஸ்லியாவை சீண்டி விட்டுட்டீங்க மது' எனப் பல்வேறு கமெண்ட்களை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் லாஸ்லியாவை அதிக வாக்குகள் பெற வைக்க வேண்டும் என அவரது ஆர்மியினர் உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.