வெறியேற்றிய அபி.. கோபத்தில் சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகென்.. வந்த வேலையை வெற்றிகரமா முடித்த வனிதா

கோபத்தில் முகென் சேரால் அபியை அடிக்கப் போவது போன்ற காட்சிகள் பிக் பாஸ் இரண்டாவது புரொமோவில் இடம் பெற்றுள்ளன.

சென்னை: பிக் பாஸ் 2வது புரொமோவில் முகென் சேரைத் தூக்கி அபியை அடிக்கப் போவது போன்ற காட்சிகள் உள்ளன. அதோடு இருவரும் கோபமாக சண்டை போட்டுக் கொள்வது போலவும் அதில் உள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்‌ஷி ஒரு வழியாக வெளியேறி விட்டார். இனி பிக் பாஸ் வீட்டில் காதல் பிரச்சினைகள் இருக்காது என மக்கள் எல்லாம் நிம்மதி அடைந்திருந்தனர். ஆனால் அதெப்படி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என முகென், அபிராமிக்கு இடையில் சண்டையை மூட்டி விட்டுள்ளார் பிக் பாஸ்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, நேற்று போட்டியாளர்களிடம் பேசும் போதே, முகெனிடம் மற்றும் சற்று காட்டமாக பேசினார். நீ சொல்லாதது கூட நான் வெளில போய் தெரிஞ்சுகிட்டேன் என முகெனை வில்லன் ரேஞ்சுக்கு உருவகப் படுத்தினார். அப்போதே வனிதா எதற்கோ டார்கெட் பண்ணி விட்டார் என்பது தெரிந்தது.

அபி கோபம்:

அபி கோபம்:

அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான முதல் புரொமோவில் அபியிடம் முகெனைப் பற்றி பேசி அவரை கோபமேற்றிக் கொண்டிருந்தார் வனிதா. முகென் என்னவோ அபியை காதலித்து ஏமாற்றி விட்டது போல் ஏகத்துக்கும் அவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார். சும்மாவே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர் அபி.

சண்டை:

சண்டை:

வனிதாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் மேலும் ஆவேசமாகி விட்டார். இது பற்றி சக போட்டியாளர்கள் மத்தியில் அவர் முகெனிடம் கேட்கிறார் போல. இரண்டாவது புரொமோவைப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கிறது. வனிதா இருவருக்கும் இடையில் ஏதோ பேசுகிறார்.

அடிக்கப் பாய்ந்த முகென்:

அடிக்கப் பாய்ந்த முகென்:

அபியும், முகெனும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அப்போது அபி வேகமாக சேரைத் தள்ளி விட்டு விட்டு எழுகிறார். இதனால் ஆத்திரமடையும் முகென், சேரைத் தூக்கி அபியை அடிக்கப் போவது போல் கோபமாக எழுகிறார். உடனே மற்ற போட்டியாளர்கள் வேகமாக வந்து முகெனையும், அபியையும் தனியே அழைத்துச் செல்கின்றனர்.

வனிதா ஆபரேஷன்:

வனிதா ஆபரேஷன்:

பிக் பாஸ் வீட்டில் வனிதா வந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டார். அவரது முதல் டார்கெட் அபியாகத்தான் இருந்தது. அபிக்கும், முகெனுக்கும் இடையில் சண்டை மூட்டி விடுவது தான் அவரது முக்கிய ஆபரேஷனாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X