சேரனுக்கு ‘மதினி’ ஆன வனிதா.. இப்பவும் கவின்-லாஸ் காதல்தான் வத்திகுச்சியோட டார்கெட்.. யூ டூ ஷெரீன்!

கிராமத்து டாஸ்க்கில் கவினை வெளியே அனுப்புவதில் தான் வனிதா தீவிரமாக இருக்கிறார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 65

சென்னை: கிராமத்து டாஸ்க்கில் இருந்தாலும் வனிதாவின் கவனம் என்னவோ கவின் - லாஸ்லியா காதலைப் பிரிப்பதில் தான் முழுவதுமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் திரும்பவும் இந்த வாரம் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் இரு கிராமத்தவர்களாக பிரிந்துள்ளனர். அனைவரும் வேட்டி, சட்டை, சேலை, பாவாடை தாவணி என மண்மணத்தோடு புரொமோவில் உள்ளனர்.

ஏற்கனவே கிராமத்து டாஸ்க் விளையாடி விட்டதால், திரும்பவும் அதையே செய்யப் போகிறார்களே, போரடிக்குமே என பீல் பண்ணிய ரசிகர்களுக்கு, 'வனிதாவை நம்பினோர் கைவிடப் படார்' என பிக் பாஸ் புரொமோ மூலம் சூசகமாகச் சொல்லி விட்டார்.

கேள்வி டாஸ்க்

கேள்வி டாஸ்க்

நேற்று தரப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டு திணற வைத்தனர். அப்போதே கவினிடம் லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி பற்றித் தான் அதிக கேள்விகளைக் கேட்டார் வனிதா. கவினும் மூடி மறைக்காமல், தானும் லாஸ்லியாவும் காதலிப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

லாஸ்லியா கோபம்

லாஸ்லியா கோபம்

ஆனாலும், அதைப் பற்றியே பேசி வெறுப்பேற்றினார் வனிதா. இதனால் கோபமடைந்த லாஸ்லியா வனிதாவைக் கண்டித்தார். ஆனாலும் அக்கா கேட்டு விடுவாரா என்ன? வளைத்து வளைத்து அதே விசயத்தையே கேட்டார். அப்போதே தெரிந்து விட்டது இந்த வாரம் வனி அக்காவின் டார்கெட் கவின் தான் என.

வனிதா மதினி

வனிதா மதினி

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோவில் கவினும், லாஸ்லியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் வனிதா, சேரனிடம் புகார் அளிக்கிறார். சேரனும் வனிதாவை மதினி என்றே அழைக்கிறார்.

கவின் தான் டார்கெட்

கவின் தான் டார்கெட்

இந்த உரையாடலின் போது, கவினை வெளிநாட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என ஐடியா சொல்கிறார் வனிதா. அங்கு இரண்டு மூன்று வருடங்கள் இருந்து விட்டு வரட்டும் என்கிறார். அதோடு, சனிக்கிழமை வருபவரோடு கவினை அனுப்பி வைத்து விடலாம் எனச் சொல்லி சிரிக்கிறார். சனிக்கிழமை வருபவர் என அவர் குறிப்பிடுவது கமலைத்தான்.

ஷெரீனும் கூட்டு

ஷெரீனும் கூட்டு

வனிதாவின் இந்த ஜாடைமாடைப் பேச்சு அங்கிருந்தவர்களுக்கு நன்கு புரிகிறது. இதைக் கேட்டு ஷெரீனும் வனிதாவுடன் சேர்ந்து சிரிக்கிறார். இதன்மூலம் வனிதா இந்த வாரம் எப்படியாவது அதிரடியாக கவினை வெளியே அனுப்பிவிட வேண்டும் என திட்டமிடுகிறார் போல. இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்பது அவருக்குத் தெரியாது பாவம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X