அம்மாடியோவ்.. பிக் பாஸ் வீட்டில் குட்டிகலாட்டா பண்ண வனிதாவுக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளமா?

பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக போயுள்ள வனிதாவின் சம்பளம் தெரிய வந்துள்ளது.

Recommended Video

Bigg Boss 3:16th August Promo1:Day54:Madhuவை அசிங்கப்படுத்திய Losliya

சென்னை: பிக் பாஸ் வீட்டில் விருந்தினர் என்ற பெயரில் நுழைந்து குட்டி கலாட்டாக்கள் பண்ணி வரும் வனிதாவிற்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதலில் போட்டியாளராகத் தான் கலந்து கொண்டார் வனிதா விஜயகுமார். அப்போது அவர் வீட்டில் அல்லி ராஜ்ஜியம் நடத்தியது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. ஆனால் சொந்தக் காரணங்களால் அவரை மூன்றாவது வாரமே வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் பிக் பாஸுக்கு ஏற்பட்டது.

வெளியில் சென்றவர் தற்போது விருந்தினர் என்ற பெயரில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

வனிதாவால் சண்டை:

வனிதாவால் சண்டை:

ஆனால் நன்றாக இருந்த பிக் பாஸ் வீடு, அவரது வருகையால் சந்தைக்காடாக மாறி விட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு தான். வனி அக்கா சத்தமில்லாமல் எங்காவது பற்ற வைத்து விட, பின் வீடே பற்றி எரிகிறது. கொலைகாரன் டாஸ்க்கில் சத்தமில்லாமல் கொலைகளைச் செய்தது போல, இப்போது சிண்டு முடியும் வேலையைப் பார்த்து வருகிறார் வனிதா.

வைல்ட் கார்ட் கஸ்தூரி:

வைல்ட் கார்ட் கஸ்தூரி:

போன வாரம் தான் கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்தார். ஆனால், அவர் வந்த சில நாட்களிலேயே வனிதாவையும் களமிறக்கி விட்டார் பிக் பாஸ். கஸ்தூரி வெளியில் பொங்கிய அளவிற்கு கூட உள்ளே கோபப்படவில்லை. அது மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பெரிய சம்பளம்:

பெரிய சம்பளம்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாள் சம்பளம் பேசி தான் கஸ்தூரி வந்துள்ளார் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். தற்போது வனிதாவும் அதே போல், மிகப் பெரிய சம்பளம் பேசப்பட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாராம். நாள் ஒன்றுக்கு அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் தனக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் எப்போது தான் வெளியே செல்வார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. வனிதா வெளியேறியபோது பீல் பண்ணியவர்கள்கூட தற்போது மீண்டும் அவரைத் திட்டத் தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X