எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலைக்கா!

பிக் பாஸ் வனிதா போட்ட பதிவுகளைப் பார்த்து நெட்டிசன்கள் ஏமாந்து போய் விட்டனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Vanitha Eliminated

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய வனிதா தனது சமூகவலைதளப் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் வனிதா விஜயகுமார். நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.

இதனால் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடித்தது. எப்படியும் பைனல்ஸ் வரைக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறினார் வனிதா.

வனிதாவின் குணம்

வனிதாவின் குணம்

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுதல், மற்றவர்கள் பற்றிய தனது கணிப்பை கூறுதல் என நெத்தியில் அடித்தபடி பேசுவதில் வல்லவர் வனிதா. தற்போது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, மது கையை அறுத்துக் கொண்டது, முகென் கட்டிலை உடைத்தது, லாஸ்லியா பெற்றோர் வந்தது, கவின் அடி வாங்கியது என பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன.

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் எதிர்பார்ப்பு

எனவே, வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அது மாதிரியான விசயங்கள் எதையாவது பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மது, கஸ்தூரி என மற்ற போட்டியாளர்களின் பேட்டி பற்றியாவது ஏதாவது பதிவு போடுவார் என நெட்டிசன்கள் காத்திருந்தனர்.

பிளாஷ்பேக்

ஆனால் இது எதையும் செய்யாமல், பிக் பாஸ் வீட்டிற்கு தனது மகள்கள் வந்தபோது நடந்தவை, கமலுடன் நடனம் ஆடியது போன்ற புகைப்படங்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார் வனிதா. அவற்றிற்கு பதில் அளித்துள்ள அவரது ரசிகர்கள், ‘வனிதா உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.

காத்திருப்பு

மேலும், ‘யாரைக் கேட்டு வெளியில் வந்தீர்கள் வனிதா. நீங்கள் பைனலுக்குப் போகணும். டைட்டில் வின் பண்ணனும்' என சில வனிதா ஆர்மியினர் தங்களது பதிவில் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ மதுவின் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் தரப்பு விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். எப்போது பேசப் போகிறீர்கள் என ஆர்வமாகக் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X