For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூடவே இருந்து குழி பறித்த வனிதா.. சட்டென கூடிய ஷெரீன் வாக்குகள்.. அப்போ இந்தவாரம் சேரன்தான் அவுட்டா?

|
Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 74 : Cheran fight with vanitha

சென்னை: வனிதாவுடனான சண்டையால் ஷெரீனுக்கு வாக்குகள் அதிகரித்து வருகிறது. அதனால் சேரன் குறைந்த வாக்குகளோடு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஐந்து பேர் நாமினேஷனில் உள்ளனர். கவின், லாஸ்லியா, முகென், ஷெரீன் மற்றும் சேரன் தான் அந்த ஐந்து பேர். தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள எட்டு போட்டியாளர்களில் வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே வந்தவர். எனவே அவருக்கு டைட்டில் கிடைப்பது சந்தேகம் தான்.

அவரைத் தவிர தற்போது மீதமுள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள் தான். அவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேறினாலுமே, நிகழ்ச்சியின் போக்கு சற்று மாறும் என்பது நிஜம்.

ஷெரின் இப்போ உங்க டர்ன்.. கர்மா இஸ் பூமராங்! மதுவோட பாவம் சும்மாவிடுமா? நெட்டிசன்ஸ் வேறலெவல்!

கடைசி இடத்தில் ஷெரீன்

கடைசி இடத்தில் ஷெரீன்

அதனால் இந்த வார எவிக்சன் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை பதிவான வாக்குகளின் படி ஷெரீன் தான் மிகக்குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தார். அவருக்கு மேலே சேரன் இருந்தார். கவின், லாஸ்லியா மற்றும் முகென் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று ஏறக்குறைய சமமான இடத்தில் உள்ளனர்.

வனிதாவுடன் சண்டை

வனிதாவுடன் சண்டை

இந்நிலையில் நேற்றும் சரி, இன்றைய புரொமோக்களிலும் சரி வனிதாவுடன் ஷெரீன் சண்டை போடுகிறார். முன்னதாக லாஸ்லியாவுடனும் ஷெரீன் சண்டை போட்டார். கூடவே இருந்தாலும் தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை என வனிதாவுடன் அவர் சண்டை போடும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேரன் கடைசி இடம்

சேரன் கடைசி இடம்

இதனால் ஷெரீன் மீது ரசிகர்களுக்கு மதிப்பு கூடியுள்ளது. சட்டென அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அவருக்கு மேலே இருந்த சேரன், கீழே தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலை நீடித்தால் நிச்சயம் இந்த வாரம் சேரன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற சூழல் நிலவுகிறது.

சாக்‌ஷியின் செட்டப்

சாக்‌ஷியின் செட்டப்

ஆனால், இவையனைத்துமே வனிதா மற்றும் சாக்‌ஷியின் செட்டப் தானோ என்ற சந்தேகமே வலுக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது மீண்டும் வந்துள்ள சாக்‌ஷி, ஷெரீனிடம் சென்று இந்த முறை நீ தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் எனக் கூறினார். அதற்கு அவர் எப்படி எனக் கேட்டபோது, ‘நான் சொல்றேன்' என்றார்.

எமோசனல் டிராமா

எமோசனல் டிராமா

ஒருவேளை இது தான் அவரது பிளானா எனத் தெரியவில்லை. வெளியில் இருந்து பார்த்தபோது, ஷெரீன் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் அவரது வாக்குகளைக் கூட்ட, இதுபோல் எமோசனலான டிராமாவை வனிதாவுடன் சேர்ந்து அவர் நடத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காதல்

காதல்

ஏனென்றால் முன்பு ஒருமுறை, தர்ஷனை ஒரு தலையாகக் காதலிப்பதாக ஷெரீனே சாக்‌ஷியிடம் கூறி இருந்தார். பின்னர் தர்ஷனுக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து தனது மனதை அவர் மாற்றிக் கொண்டார். ஆனாலும், அவ்வப்போது அவர்கள் ரொமான்ஸ் பார்வை வீசுவதை மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்பட்டமான நாடகம்

அப்பட்டமான நாடகம்

அவற்றைப் பார்க்கும் போது, தர்ஷனின் நிஜக் காதலிக்கே அவர்கள் காதலிப்பதாகத் தான் தோன்றுவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படி இருக்கையில் இன்று வனிதாவிடம் தான் தர்ஷனைக் காதலிக்கவே இல்லை. அவர் வீணாக பழி போடுகிறார் என ஷெரீன் நடந்து கொண்டது அப்பட்டமான நாடகமாகவே தோன்றுகிறது.

குழி பறித்த வனிதா

குழி பறித்த வனிதா

பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டில் சேரன், வனிதாவுடன் தான் அதிகம் பேசுகிறார். தனது மன ஓட்டங்களை அவருடன் தான் அவர் பகிர்ந்து கொள்கிறார். அப்படி இருக்கையில் சேரனைக் காப்பாற்ற நினைக்காமல், கூடவே இருந்து குழி பறிப்பது போல், சேரனை பழி வாங்கி விட்டாரே என சேரன் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Because of the fight between Sherin and Vanitha, Cheran's votes affected literally. Sherin is now entering into the safe zone by getting high vote.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more