Don't Miss!
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கம் இப்போ வாங்கலாமா..?
- News இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்.. எகிறும் டென்ஷன்
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'வனிதாவை முகென் அறைந்தாரா.. உண்மையில் நடந்தது என்ன?' இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கே புரியும்
இன்றைய எபிசோடின் 3வது புரொமோவில் முகெனின் பாட்டுக்கு வனிதா சிரிப்பது போல் உள்ளது.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரொமோவின் மூலம் முகென், வனிதாவை அறைந்ததாக வெளியான செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே கலக மூட்டுவதற்காகவே உள்ளே சென்றிருக்கிறார் வனிதா. ஒவ்வொருவராக டார்கெட் செய்து, பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்.
வனிதாவின் முதல் டார்கெட் முகென் மற்றும் அபிராமி தான். அபிராமியை ஏற்றிவிட்டு, முகெனிடன் பிரச்சினை செய்ய வைத்ததை நாம் கண்கூடாக பார்த்தோம்.
காளி எங்கள் குல தெய்வம்... திருப்பதி வெங்கடாசலபதியும் இஷ்ட தெய்வம் - எம்ஜிஆர்
கோபப்பட்ட சாண்டி
அடுத்தடுத்து பிரச்சினைகள் செய்து வந்ததால் வனிதா மீது ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே கடுப்பில் தான் இருக்கிறார். முகென் விவகாரத்தில், வனிதா மீது கோபத்தை காட்டினார், எப்போதும் அமைதியாக இருக்கும் சாண்டி.
லாஸ்லியாவின் கோபம்
எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என சுற்றிக்கொண்டிருந்த லாஸ்லியாவும் வனிதா மீது கோபப்பட்டதை இன்று வெளியான முதல் புரொமோவில் பார்த்தோம். தர்ஷனிடம் வனிதா சண்டை போடும் போது குறுக்கிடும் லாஸ்லியா, அவரை கிழிகிழி என கிழிக்கிறார். இன்றும் ஏதோ ஒரு கலவரம் காத்திருப்பதை உணர முடிந்தது.
தேம்பி அழும் முகென்
இந்நிலையில் இரண்டாவது புரொமோவில் அபியிடம், முகென் தேம்பி தேம்பி அழும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சிகளை பார்க்கும் போது, முகென் மீது நமக்கு பரிதாபம் ஏற்படும் வகையில் இருந்தது. எனவே இன்றைய எபிசோடில், ஆக்ஷன் மட்டுமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும் என தெரிந்தது.
|
3வது புரொமோ
ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் 3வது புரொமோ மூலம் இன்றைய எபிசோடில் காமெடியும் நிறைந்திருக்கும் என தெரிகிறது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து கலாய்க்கும் வகையில் பாட்டாக பாடுகிறார்கள் முகென், தர்ஷன், சாண்டி மற்றும் கவின். ஆகவே நேற்றைக்கு பத்ரி பட பாணியில் வனிதாவை கலாய்தது போல், இன்றும் நகைச்சுவை காட்சிகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிரிக்கும் வனிதா
முகெனின் பாடலை சக ஹவுஸ்மேட்ஸ் ரசிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந���தன. இதில் ஹைலைட் என்னவென்றால் முகெனின் பாடலை கேட்டு வனிதாவும் ரசித்து சிரிப்பது தான். எனவே காலையில் வெளியான தகவலின்படி முகென், வனிதாவை அறையவில்லை என்பது தெளிவாகிறது. அப்படி ஏதாவது நடந்திருந்தால் நிச்சயம் புரொமோவில் அந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். யாரோ சில முகென் எதிர்பார்ப்பாளர்கள் வேண்டும் என்றே வதந்தியை பரப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.