சத்தமில்லாமல் கொளுத்திப்போட்ட சாண்டி.. பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. ருத்ரதாண்டவமாடும் வனிதா..!
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகளை செய்து வருகிறார் வனிதா.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வனிதா செய்யும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை.
பிக் பாஸ் தமிழ் 3வது சீசனின் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. இதில் கவின் சேரனையும், ஷெரீனையும் நாமினேட் செய்தார். சேரன், கவினையும், முகெனையும், நாமினேட் செய்தார். லாஸ்லியாவையும், கவினையும், சாண்டி நாமினேட் செய்தார்.
பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக வனிதா இருப்பதால் அவரையாரும் நாமினேட் செய்ய முடியாது. இந்நிலையில் இந்த நாமினேஷனை சாக்காக வைத்து, ஒவ்வொருவரையும் பிரச்சினைக்கு இழுத்தார் வனிதா.

கவினை சீண்டிய வனிதா
முதலில் கவினை சீண்டிய வனிதா, சேரன் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்ய அவர் கூறும் காரணங்களை ஏற்க முடியாது என்றார். சேரனும், ஷெரீனும் பல வெற்றிகளை பார்த்தவர்கள், வெற்றியை பார்த்திராத தர்ஷன் போன்றோருக்கு அவர்கள் வழிவிட வேண்டும் என்பதற்காக நாமினேட் செய்வதாக கவின் கூறியிருந்தார். வனிதாவின் மறுப்பை தொடர்ந்து, சேரனை தனக்கு பர்சனலாக பிடிக்காது என்பதால் நாமினேட் செய்வதாக கவின் கூறினார்.

கடும் வாக்குவாதம்
இதையடுத்து கவினையும், லாஸ்லியாவையும் நாமினேட் செய்த சாண்டி, அதை நினைத்து தேம்பி தேம்பி அழுதார். இதற்கும் பிரச்சினையை கூட்டினார் வனிதா. " மக்களிடம் சிம்பதி பெற வேண்டும் என்பதற்காக ஏன் இப்படி டிராமா செய்ய வேண்டும்?" என சாண்டியிடம் வனிதா கேட்டார். இதற்கு லாஸ்லியா, கவின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வனிதாவுக்கும், மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது.

வாயடைக்கும் வனிதா
யாரையும் பேச விடாமல் வனிதாவே தொடர்ந்து பேசி வந்தார். கவின், லாஸ்லியா, தர்ஷன் உள்ளிட்டோர் விடாமல் வனிதாவை எதிர்த்து பேசினர். நடுவில் ஏதோ பேச வந்த சேரனையும் பேசவிடாமல் வாயடைத்துவிட்டார் வனிதா. எனவே அவர் ஒருவருடைய சத்தம் தான் நேற்றைய எபிசோட் முழுவதும் அதிகமாக கேட்டது.

தொடரும் பிரச்சினை
இந்நிலையில் இன்றைய முதல் புரொமோவில், அந்த பிரச்சினையை மேலும் தொடர்கிறார் வனிதா. மைக்கை கழட்டி மாட்டிவைத்துவிட்டு, கவின் கூறிய காரணம் ஏற்புடையதா என்பது குறித்து விளக்கம் அளிக்க பிக் பாஸை வற்புறுத்துகிறார் வனிதா. அவருக்கு அருகில் சேரனும், ஷெரீனும் அமர்ந்திருக்கின்றனர். எனவே இன்றைக்கும் பிக் பாஸ் வீடு சந்தைக்கடை போல் காட்சியளிக்கும் என்பது மட்டும் உறுதி.

சாண்டி தான் காரணம்
உண்மையை சொல்வது என்றால் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணமே சாண்டி செய்த நாமினேஷன் தான். அவர் நினைத்திருந்தால் கவின், லாஸ்லியாவை தவிர்த்து வேறு யாரையாவது நாமினேட் செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், அவர்களை நாமினேட் செய்தது மட்டுமன்றி அழுததும் தான் வனிதாவுக்கு தீனிப்போட்டது போல் ஆகிவிட்டது.


Click it and Unblock the Notifications











