கஸ்தூரிக்கு பாடி ஸ்ட்ராங்கு.. ஆனா பேஸ்மெண்ட் வீக்கு.. வனிஅக்காகிட்ட சிக்கி சின்னாபின்னமாகிட்டாங்களே!

பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி உட்பட அனைத்து போட்டியாளர்களை ஒரு வழி படுத்தி வருகிறார் வனிதா.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2:Day 50: Kavin-னை திட்டிய Vanitha- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கண்டெண்ட் குயின்களான வனிதா, மீராவின் இடத்தை நிரப்புவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கஸ்தூரி அடங்கிப் போய் விட்டார். எனவே மீண்டும் வனிதாவை களமிறக்கி இருக்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் முதல் மூன்று வாரம் மட்டுமே போட்டியாளராக இருந்தவர் வனிதா விஜயகுமார். ஆனால், நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைக்க அவர் முக்கியக் காரணமாக இருந்தார் என்றால் மறுப்பதற்கில்லை. அந்தளவிற்கு கண்டெண்ட் கொடுத்து வந்தார்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக ஒரு பேச்சு இருந்தது. அது பிக் பாஸ் காதுகளுக்கும் எட்டி விட்டதோ என்னவோ மீண்டும் வனிதாவை பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்கி விட்டார்.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

கடந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் கஸ்தூரி. அட பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரியா அப்போ இனி கண்டெண்டுக்கு பஞ்சமிருக்காது என மக்கள் சந்தோசப்பட்டனர். ஆனால், மற்ற போட்டியாளர்களைப் போலவே கஸ்தூரியும் சேஃப் கேம் விளையாட ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகப் போகிறது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று.

ஏமாற்றிய கஸ்தூரி:

ஏமாற்றிய கஸ்தூரி:

ஆனால், இதுவரை அவரால் அங்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. லக்ஸரி டாஸ்க்கின் போது அவருக்கும், மதுவுக்கும் ஏதாவது பெரிய சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் புஷ்ஷென மாறியது. சரி, சாக்‌ஷி, கவின், லாஸ்லியாவையாவது ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்த்தால் அதுவும் இல்லை.

கட்டாயத்தில் பிக் பாஸ்:

கட்டாயத்தில் பிக் பாஸ்:

கஸ்தூரி வேலைக்கே ஆகமாட்டார் என பிக் பாஸ் முடிவு செய்து விட்டார் போலும். அதனால் தான் அதிரடியாக வேறு யாரையாவது களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஏற்கனவே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கஸ்தூரியைச் சேர்த்து 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டனர். எனவே, சிறப்பு விருந்தினராக மட்டுமே யாரையாவது உள்ளே அனுப்ப முடியும்.

வனிதா அக்கா:

வனிதா அக்கா:

தெரியாத பேயை விட, தெரிந்த பிசாசு மேல் என முன்னாள் போட்டியாளர்களையே வீட்டிற்குள் அனுப்புவது என பிக் பாஸ் முடிவு செய்து விட்டார். அதன்படி நேற்று வனிதாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டார். சும்மா அமைதியா போறவங்களையே கூப்பிட்டு, ‘நீ ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சே' என வாண்டடாக வம்புக்கு இழுப்பதில் அக்கா ஆல் டைம் கில்லி.

அட்வைஸ் மழை:

அட்வைஸ் மழை:

இப்போது வெளியில் சென்று அனைத்து போட்டியாளர்களின் நிஜ முகங்களையும் பார்த்து வந்துள்ளார். கேட்கவா வேண்டும். இனிமே தான் பார்க்கப் போற காளியோட ஆட்டத்தை என்ற ரேஞ்சுக்கு போட்டியாளர்களை நேற்றே ஒரு வழி செய்து விட்டார். கஸ்தூரியைக்கூட அவர் பேசவிடவில்லை. சக போட்டியாளர்களின் காதில் ரத்தம் வராத குறையாக பேசித் தீர்த்து விட்டார்.

பாவம் போட்டியாளர்கள்:

பாவம் போட்டியாளர்கள்:

ஆனால், எல்லாமே சவுக்கடிதான். ஒவ்வொரு போட்டியாளரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். பாவம் பதில் பேச முடியாமல் அனைத்து போட்டியாளர்கள் விழித்தனர். எதிர்த்து பேச நினைத்தாலும் வனிதா அவர்களைப் பேச விடவில்லை. இனி எத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் அவர் இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. ஆனால், அதுவரை நிச்சயம் வனிதாவின் குரல் தான் அங்கு ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X