“வந்துட்டேன் நான் எமதர்மன் வந்துட்டேன்”.. மிரட்டும் வனிதா.. பயந்து நடுங்கும் லாஸ்லியா
பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதா எமதர்மன் வேடம் ஏற்றுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க்கில் நடிகை வனிதா எமதர்மன் வேடம் ஏற்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்சுரி பட்ஜெட்டுக்காக பொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய எபிசோடில் பொம்மலாட்டம் செய்து காட்டப்பட்டது.
இன்றைய டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு தெருக்கூத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை இன்றைய முதல் புரொமோ காட்டுகிறது.

எமதர்மராஜாவாக வனிதா
இதி சேரன், சாண்டி, முகென், தர்ஷன், ஷெரீன், லாஸ்லியா, கவின் அகிய ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வனிதாவுக்கு எமதர்மராஜா வேடம் கொடுக்கப்பட்டுள்ளது தான். "வந்துட்டேன் வந்துட்டேன் எமதர்மன் வந்துட்டேன்" என அவர் கூத்துக்கட்டி ஆடுவதை ஹைலைட் செய்து காட்டுகிறார்கள்.

சித்ரகுப்தனான லாஸ்லியா
லாஸ்லியாவுக்கு சித்ரகுப்தன் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. லாஸ்லியாவுக்கும், வனிதாவுக்கு ஏற்கனவே செமையாக செட்டாகும் என்பதால், சித்ரகுப்தனை வெச்சு செய்கிறார் எமதர்மன். "எங்கே அந்த சித்ரகுப்தன்" என மிரட்டும் தொனியில் வனிதா கத்துவதை கேட்டு ஓடோடி வருகிறார் லாஸ். ஆக இன்னைக்கு எமதர்மனின் கச்சேரி அரங்கேறப்போவது மட்டும் கன்பார்ம்.
We respect these. But Week 10 is not apt for all these.#BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/KRPIIph66S — ராவணன் (@_raja) August 28, 2019 '>
ராவணனின் கருத்து
இந்த புரொமோ குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ராவணன் என்பவர், "அன்பார்ந்த விஜய் தொலைக்காட்சி, தமிழ் கலாச்சாரத்தின் பலவகையான கலைகளுக்கு நீங்கள் மரியாதை செய்வதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இதையெல்லாம் நீங்கள் முதல் சில வாரங்களில் செய்திருக்க வேண்டும். இதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் 10வது வாரம் இதற்கு சரியானது அல்ல", என தெரிவித்துள்ளார்.
ஷெரீன் நடிப்பு
"அய்யோ சாமி... மொழி தெரியவில்லை என்றாலும் ஷெரீன் நடிப்பு எல்லாமே சூப்பரா இருக்கு. எது கொடுத்தாலும் 100 சதவீதம் அர்பணிப்போடு செய்றாங்க", என இவர் ஷெரீனை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











