திரும்பவும் அதே டாஸ்க்.. சேரனுக்காக நோகாமல் நோன்பி கொண்டாடும் பிக் பாஸ்.. சாமியாடத் தயாராகும் வனிதா?

திரும்பவும் பிக் பாஸ் வீட்டில் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 65

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கிராமத்து டாஸ்க் வைத்துள்ளது பார்வையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. சேரன் மற்றும் வனிதாவிற்காகவே பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்க் கொடுத்திருப்பதாக அவர்கள் திட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாகவே எந்த பரபரப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு வைக்கப்படும் டாஸ்க்குகளும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் மொக்கையாக உள்ளது.

பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை ஒப்பிடும் போது, தமிழ் பிக் பாஸ் டாஸ்க்குகள் மிகமிக சாதாரணமானவை என்பதே பார்வையாளர்களின் கருத்து. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் போட்டியாளர்களுக்கு மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பொம்மலாட்ட பயிற்சி

பொம்மலாட்ட பயிற்சி

மறைந்து போன பொம்மலாட்ட கலையை வைத்து இந்த டாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை கிராமத்து பிண்ணனியில் செய்ய வைத்திருப்பதற்கு பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிரியேட்டிவ்வான நபர்களே இல்லையா, கொடுத்த டாஸ்க்கையே திரும்பவும் கொடுக்கிறீர்களே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

சேரன் இருக்கும் வரை..

"ஆக மொத்தத்துல சேரன் உள்ளே இருக்கும் வரைக்கும் பிசிக்கல் டாஸ்க் கிடையாது. ஆனா வக்கனையா எல்லோரையும் கேள்வி கேட்பீங்க. கமல் சார் அடுத்த முறை பிக் பாஸை கன்பெக்ஷன் ரூமுக்கு அழைத்து வந்து கேள்வி கேளுங்கள்", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

திரும்பவுமா?

"மறைந்து போன பொம்மலாட்ட கலையை மையமாக வைத்து டாஸ்க் உருவாக்கியது மகிழ்ச்சி தான். ஆனால் மீண்டும் கிராமத்து டாஸ்க்கா? என்னா பிக் பாஸ்? வனிதா எதை எல்லாம் மிஸ் செய்தாங்களோ அதை எல்லாம் அவங்களுக்காக மீண்டும் கொண்டு வாரங்க போலிருக்கு", என இவர் தெரிவித்துள்ளார்.

ஊரு விட்டு ஊரு வந்து

ஊரு விட்டு ஊரு வந்து

இந்த டாஸ்க்கிலும் கவினும், லாஸ்லியாவும் வேறு வேறு ஊர்க்காரர்கள் தான். ஒருவேளை ஒரே ஊர்க்காரர்கள் காதலிக்க மாட்டார்கள் என பிக் பாஸ் நினைத்து விட்டார் போலும். ஆனால், இந்த டாஸ்க்கில் கவினும், சேரனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மீரா பிரச்சினை

மீரா பிரச்சினை

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இதே போல் கிராமத்து டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது சேரன் நாட்டாமையாக இருந்தார். அந்தவாரம் தான் மீரா, சேரன் மீது பழி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் டாஸ்க் அவ்வளவாக விறுவிறுப்பாக இல்லாத போதும், பிக் பாஸுக்கு கண்டெண்ட் கிடைத்தது.

வனிதாவுக்காக வெயிட்டிங்

வனிதாவுக்காக வெயிட்டிங்

அதேபோல் இந்த வாரம் ஏதாவது பிக் பாஸ் கண்டெண்ட் கிடைக்கும் என வனிதாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் போல. வனிதா சாமியாடுவதற்கென்றே பிக் பாஸ் இந்த டாஸ்க்கைக் கொடுத்திருக்கிறார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தடவை வனிதா யாரை வெளியே அனுப்பப் போகிறாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X