BiggBossTamil3: அடுத்த மகத், யாஷிகா யார் தெரியுமா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil:பிக் பாஸ் 3யின் 15 கருப்பு ஆடுகள் | Bigg Boss 3 Contestants

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் யார் அடுத்த யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி, பாலாஜி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று இரவு 8 மணிக்கு பிரமாண்டமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் பாடகர் முகென் ராவ், மாடல் தர்ஷன், லொஸ்லியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான சேரன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல சம்மதிப்பார் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை. வாங்க, பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வருவோம்.

கவின்

சாக்ஷி அகர்வால் தான் அடுத்த யாஷிகாவாம். நடிகர் சரவணன் பொன்னம்பலமாம், முகென் ராவ் தான் அடுத்த மகத்தாம். அப்படி என்றால் முகென் ராவ் யாரையாவது காதலிப்பாரோ?. சாண்டி தான் சென்றாயனாம், சேரனை ஏன்பா தாடி பாலாஜி என்று சொல்கிறீர்கள்?. வனிதா அடுத்த நித்யா என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சொல்லப் போனால் நித்யாவுக்கும் ஒருபடி மேல் என்றே கூறலாம். அவரால் நிச்சயம் பெரிய என்டர்டெயின்மென்ட் இருக்கும். தர்ஷன் தான் தாரிக்காம். நடக்கட்டும் நடக்கட்டும்.

பொய் காதல்

பிக் பாஸ் 3 போட்டியாளர்களை பார்க்கும்போது கடந்த சீசனை விட நல்ல தேர்வு போன்று தெரிகிறது. இந்த சீசனிலாவது போலி காதல் எதுவும் இல்லாமல் இருக்கும் என்று நம்புவோமாக என்கிறார்கள் நெட்டிசன்கள். அவர்கள் சொல்வதும் சரி தானே.

சாண்டி

பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் சாண்டி பேசும் விதம் பிடிக்கவில்லை என்கிறா்களே. சாண்டியை பிடிக்காவிட்டாலும் முகென் ராவை பலருக்கும் பிடித்துள்ளது. அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

சேரன்

சீனியர்களான சேரனும், சரவணனும் பணத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருப்பார்கள். அதை குறை சொல்வதற்கு இல்லை. ஆனால் அவர்கள் பொன்னம்பலம் போன்று கலாச்சார காவலராகவோ இல்லை ஸ்நேக் சினேகன் போன்றோ இல்லாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் ரசிகர்கள். சேரன் மிகவும் தன்மையானவர். அவர் நிச்சயமாக பொன்னம்பலம் போன்று நடந்து கொள்ள மாட்டார் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X