டிக்கெட் டு பினாலே கன்பார்மா இவருக்கு தான்.. கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே யாருக்கு கிடைக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த நேரடியாக பைனலுக்குச் செல்வதற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக இதுவரை நான்கு டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய புரொமோ மூலம் போட்டியாளர்களுக்கு இன்றும் ஒரு டாஸ்க் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் கார்டன் பகுதியில் உள்ள போர்ட்டில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிகள் நடந்து முடிந்ததும் பிக் பாஸ் போட்டியாளர்களின் மதிப்பெண்களைக் கூறி வருகிறார். அவற்றின் மூலம் டிக்கெட் டு பினாலே யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வந்து விட்டது.

போட்டியாளர்களின் மதிப்பெண்கள்

போட்டியாளர்களின் மதிப்பெண்கள்

அந்த மதிப்பெண் பட்டியல் போர்டில் ஒவ்வொரு போட்டியாளரின் புகைப்படங்களும், அவற்றிற்கு நேரே அவர்கள் ஒவ்வொரு டாஸ்க்கிலும் பெற்ற மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. அதில், சேரன் 3, 4, 6, 1 எனத் தரப்பட்டுள்ளது. அதற்குக் கீழே கவின் பெயர் உள்ளது. அவரது மதிப்பெண்கள் 1, 1, 1, 6 ஆகும்.

ஷெரின்

ஷெரின்

இந்த வரிசையில், லாஸ்லியா 5, 2, 3, 5 என்ற மதிப்பெண்களும், முகென் 2, 5, 4, 7 என்ற மதிப்பெண்களும், சாண்டி 6, 6, 2, 4 என்ற மதிப்பெண்களும், ஷெரின் 4, 3, 7, 3 என்ற மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தர்ஷனுக்கு 7, 7, 5, 2 என மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இவை பலூன் உடைத்தல், சாயம் ஊற்றுதல், எடை தூக்குதல் மற்றும் மேடையில் நின்ற டாஸ்க்குகளில் கிடைத்த மதிப்பெண்கள் ஆகும்.

ஒரு போட்டி பாக்கி

ஒரு போட்டி பாக்கி

இதன் அடிப்படையில் பார்த்தால், சேரன் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 14 ஆகும். இதே போல, கவின் - 9, லாஸ்லியா - 15, முகென் - 18, சாண்டி - 18, ஷெரின் - 17 மற்றும் தர்ஷன் - 21 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அந்த அட்டவணையில் இன்னும் ஒரு வரிசை மட்டுமே மீதமுள்ளது.

கடைசி கட்டம்

கடைசி கட்டம்

எனவே, இன்று நடைபெறும் மூட்டை தூக்கிக் கொண்டு டாஸ்க்கோடு இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க் முடிவடைந்து விடும் எனத் தெரிகிறது. இன்றைய முதல் புரொமோவில் காட்டப்பட்ட காட்சிகளின் படி, அதில் சேரன், தர்ஷன், ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் வெளியேறி விடுகின்றனர். எனவே அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கப்போவதில்லை.

மூன்று பேர்

மூன்று பேர்

கவின் மிகக் குறைவான மதிப்பெண்களே பெற்றிருப்பதால் இதில் வெற்றி பெற்றாலும் அவர் பட்டியலில் முதலிடத்திற்கு வரப்போவதில்லை. இவற்றை வைத்துப் பார்க்கும் போது டிக்கெட் டு பினாலே சாண்டி, முகென் அல்லது தர்ஷனுக்கு கிடைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. சாண்டியும், முகெனும் சரிசமமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் தர்ஷன்

முதலிடத்தில் தர்ஷன்

எனவே, இதில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் மொத்த மதிப்பெண்கள் அதிகரிக்கும். ஒருவேளை தர்ஷனுக்கு இதில் மூன்று மதிப்பெண்கள் கிடைத்தால் அவரது மொத்த மதிப்பெண் 24 ஆகி விடும். அதே நேரத்தில் சாண்டி அல்லது முகென் இந்த கடைசி டாஸ்க்கில் வெற்றி பெற்று முழு மதிப்பெண்களான ஏழு மதிப்பெண்களையும் பெற்று விட்டால், அவர்களது மொத்த மதிப்பெண் 25 ஆகி விடும்.

மீண்டும் ஒரு டாஸ்க்

மீண்டும் ஒரு டாஸ்க்

அப்போது தர்ஷனை விட அவர்களில் ஒருவர் அதிக மதிப்பெண்கள் பெற்று டிக்கெட் டு பினாலே பெற்று விடுவர். அதே சமயம், தர்ஷனுக்கு இந்த சுற்றில் 4 மதிப்பெண்கள் கிடைத்து விட்டால் அவரது மொத்த மதிப்பெண்ணும் 25 ஆகி விடும். எனவே, மீண்டும் முகென்/சாண்டி மற்றும் தர்ஷனுக்கு தனியாக கடினமான ஒரு போட்டி வைத்து வெற்றியாளரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

 விறுவிறுப்பு

விறுவிறுப்பு

எது எப்படியோ டிக்கெட் டு பினாலே சேரனுக்கு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அதேபோல் பெண் போட்டியாளர்கள் இருவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது. நெருக்கடியான சூழ்நிலையில் போட்டியாளர்கள் விளையாடி வருவதால், பிக் பாஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X