லாஸ்லியாவைப் பார்த்து ‘அதை’ கத்துக்கோங்க சேரன்.. வனிதாவோட சூழ்ச்சில சிக்கி பேரக் கெடுத்துக்காதீங்க!

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா விசயத்தில் வனிதாவின் சூழ்ச்சியில் சிக்கி சேரன் தனது பேரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை: லாஸ்லியாவுக்கு இருக்கும் நல்ல பண்பு சேரனுக்கு இல்லாமல் போனது ஏன் என பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இல்லாத வகையில் ஹவுஸ்மேட்ஸ் இப்போது இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் வனிதாவின் ரீஎண்ட்ரி. வந்ததில் இருந்து குட்டிகலாட்டாக்களை செய்து வருகிறார் அவர். கூடவே கஸ்தூரியும் சேர்ந்து கொண்டு பிரச்சினைகளுக்கு தூபம் போட்டு வருகிறார்.

அவெஞ்சர்ஸ் அணி

அவெஞ்சர்ஸ் அணி

சாண்டி, கவின், முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகிய ஐந்து பேரும் ஒரு அணியாக செயல்பட்டு ரசிகர்களிடம் இருந்து அப்ளாஸ் வாங்கி வருகின்றனர். அவர்களை அவெஞ்சர்ஸ், 5 ஸ்டார்ஸ் என பட்டப்பெயர் வைத்து நெட்டிசன்கள் மீமி வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தேவைக்கு மட்டுமே குரல் கொடுப்பதால் மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.

கஸ்தூரி

கஸ்தூரி

இவர்களுக்கு எதிராக இருப்பது மதுமிதா மட்டும். அவருக்கு பின்னால் வனிதாவும், கஸ்தூரியும் இருந்து கொண்டு உசுப்பேற்றி வருகிறார்கள். அந்தப் பக்கம் போவதா, இந்தப் பக்கம் இருப்பதா எனும் குழப்பத்திலேயே ஷெரீன் மற்றும் அபிராமியின் பொழுது கழிகிறது.

தனித்து நிற்கும் சேரன்

தனித்து நிற்கும் சேரன்

ஆனால் இதில் எந்த அணியுடனும் நெருக்கமாக ஒன்ற முடியாமல் தனியாக நிற்பது சேரன் மட்டுமே. ஆரம்பத்தில் லாஸ்லியாவிடம் தான் அவர் நெருக்கமாக இருந்தார். இருவரும் அப்பா, மகள் என்றே அழைத்துக்கொண்டனர். சேரனை லாஸ்லியா சேரப்பா என அழைத்தது டிரெண்டாகும் அளவுக்கு ஹிட்டானது.

மகளுடன் சண்டை

மகளுடன் சண்டை

அப்படி இருந்த அப்பா, மகள் உறவில் தற்போது பெரிய விரிசல் விழுந்துள்ளது. சேரனும், லாஸ்லியாவும் இப்போது பேசிக்கொள்வது இல்லை. இருவரும் எதிர் எதிரே வந்தாலும் விலகி சென்றுவிடுகின்றனர். சேரனுக்கு இந்த விஷயம் மனதில் தைத்த முள்ளாக வலிப்பது போல் மதுமிதா உள்ளிட்டவர்களிடம் தனது வேதனையை பகிர்ந்து வருகிறார்.

வருத்தம்

வருத்தம்

பதிலுக்கு அவர்கள் லாஸ்லியாவை பற்றி குறை கூறுகிறார். ஆனால் சேரன் அதை தடுப்பதில்லை. ஆமோதிக்கும் வகையில் தான் பேசுகிறார். தனக்கு மகள்கள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும், லாஸ்லியாவை அப்படித்தான் நினைத்ததாகவும் அவர் கூறினார். அதோடு, லாஸ்லியா இந்த வீட்டில் சேரப்பா என கூப்பிட்டு வந்ததால் தான், தனது வீட்டில் இருப்பது போன்றே பீல் பண்ணியதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டிப்பு

கண்டிப்பு

ஆனால் லாஸ்லியாவோ சேரனோடு ஏன் மனக்கசப்பில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும், அவரைப் பற்றி தேவையில்லாமல் எதுவும் பேசுவது இல்லை. பத்ரி ஸ்டைலில் வனிதாவை சாண்டி கலாய்த்த போது, சேரனையும் கேலி செய்தார். அப்போது குறிக்கிட்ட லாஸ்லியா, அவரை (சேரனை) பற்றி பேச வேண்டாம் என சாண்டியை எச்சரித்தார்.

நழுவிச் சென்ற சேரன்

நழுவிச் சென்ற சேரன்

அதோடு நேற்று அவரே வாண்டடாகச் சென்று சேரனிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போதும் சேரன் தான், அவரிடம் பேசாமல் நாசுக்காக விலகிச் சென்றார். ஏன் நேத்து நைட் சொல்லாம தூங்கினீங்க?' என லாஸ்லியா கேட்டபோது கூட, ‘அப்பிடியா சொல்லலியா?' என நடித்தார். பிறகு ‘அப்புறம் பேசலாம்' என விலகிச் சென்றார். இதன்மூலம் பேச வரும் லாஸ்லியாவை அவர்தான் புறக்கணிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஏன் சேரன் இப்படி?

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், "லாஸ்லியா கொஞ்சம் ஓவரா பண்ணறது ஓகே தான். ஆனால் லாஸ்லியா சேரனை பற்றி பின்னால் தப்பா பேசி பார்த்தீங்களா. கேங்ல யாராவது சேரனை கலாய்ச்சா, அவரை விட்டுடுங்கன்னு தான் சொல்லுவா. ஆனா சேரன், லாஸ்லியா பற்றி மது, வனிதா, ஷெரீன்கிட்ட பின்னாடி பேசுகிறார். இது எல்லாமே மது கிரியேட் பண்ண விஷயம்", என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X