டாஸ்க்கில் வென்ற லாஸ்லியா.. சொன்னபடி முகத்தை காட்டுவாரா பிக் பாஸ்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் லாஸ்லியா.

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : கவினை பிரிந்து வருத்தத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்-வீடியோ

சென்னை: இன்றைய எபிசோடில் பிக் பாஸ் முகம் காட்டப்படுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பைனல்ஸ் நடக்க இருக்கிறது. சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகிய ஐந்து பேர் தான் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நாளை வெளியேறிவிடுவார்.

எனவே இன்றைய மற்றும் நாளைய எபிசோடுகள் மிக திரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகென் கோல்டன் டிக்கெட் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டதால், மீதியிருக்கும் நான்கு பேரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது.

புட்பால் டாஸ்க்

புட்பால் டாஸ்க்

இதனிடையே இன்றைய எபிசோட் குறித்த மற்றொரு எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்க்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஒரு கூடையில் போடப்பட்டிருந்த பந்துகளின் மேல ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பந்தின் மீதும் ஒரு ஸ்டிக்கர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு பிடித்த பந்தை எடுத்துக்கொண்டு, கண்களை கட்டிக்கொண்டு காலால் பந்தை உதைத்து சரியாக கோல் போட வேண்டும்.

பரோட்டா கோழிக்கறி

பரோட்டா கோழிக்கறி

முதலில் விளையாடிய முகென் 'ஹேட்மசாஜ்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பந்தை எடுத்தார். ஆனால் அவர் கோலில் அதை போடவில்லை. இரண்டாவதாக ஆடிய தர்ஷன், வழக்கம் போல் முட்டை பரோட்டா கோழிக்கறியை தேர்ந்தெடுத்தார். பந்தை அவர் சரியாக கோலில் அடித்து வெற்றிப் பெற்றார்.

ஷெரின் ஸ்பா

ஷெரின் ஸ்பா

'ஸ்பா' பந்தை தேர்வு செய்த ஷெரின், அதனை சரியாக கோலில் போட்டு வெற்றி பெற்றார். அதேபோல் சாண்டி சரியாக கோல் அடித்து கிரல் சிக்கனை தட்டிச்சென்றார். இவர்கள் ஐவரில் லாஸ்லியாவின் ஆசை தான் வித்தியாசமாக இருந்தது.

பிக் பாஸ் உடன் புகைப்படம்

பிக் பாஸ் உடன் புகைப்படம்

'பிக் பாஸ் உடன் புகைப்படம்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பந்தை லாஸ்லியா தேர்வு செய்தார். பிக் பாஸ் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு லாஸ்லியா மட்டுமின்றி மற்ற ஹவுஸ்மேட்சிடமும் இருந்தது. முதல் வாய்ப்பிலேயே பந்தை சரியாக கோல் அடித்து வெற்றி பெற்றார் லாஸ்லியா.

முகத்தை காட்டுவார்களா..

முகத்தை காட்டுவார்களா..

ஆனால் நேற்றைய எபிசோடில் யாருடைய ஆசையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இன்றைய எபிசோடில் பிக் பாஸ் முகம் காட்டப்படுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழில் 3வது சீசனும் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை யாருமே பிக் பாஸை பார்த்ததில்லை. அந்த கம்பீர குரலின் சொந்தக்காரர் யார் எனும் மர்மம் இன்று உடையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X