கவினுக்கு தெரியாத ‘அந்த’ ரகசியம்.. போட்டுடைப்பாரா சாக்ஷி?.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
கவினின் தாய் கைது செய்தது பற்றி அவரிடம் சாக்ஷி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: கவினின் தாய் கைது செய்தது பற்றி அவரிடம் சாக்ஷி தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுக்க காரணமே தன்னுடைய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக தான் என கவின் ஒருமுறை கூறினார். ஏழு வாரங்கள் இருந்தால் தன்னுடைய கடனை அடைத்துவிடுவேன் என அவர் நம்பிக்கையாக இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் பத்து வாரங்களை கடந்துவிட்டார் கவின். இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால், அவர் எவிக்ட் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஏற்கனவே குறிப்பிட்டது போல் தனது கடனை அடைக்கும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சம்பாதித்துவிட்டார்.

தாயார் கைது
ஆனால் வெளியில் அவரது குடும்பத்தில் ஒரு பெரிய பிரளயமே நடந்திருக்கிறது. சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கவினின் தாயாருக்கும், அவரது உறவினர்கள் இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வதந்தி
இந்த தகவல் கவினுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், உடனடியாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது. தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்.

கேள்விக்குறி:
அதோடு, அவரது அம்மா கைது பற்றிய தகவல் தெரிந்தது மாதிரி இல்லை. லாஸ்லியாவுடனான காதல் பிரச்சினையில் தான் அவர் இப்போது இருக்கிறார். மற்றபடி, அவரது அம்மா கைது செய்யப்பட்டது தெரிந்து அவர் சோகப்பட்டது மாதிரி தெரியவில்லை.

சாக்ஷி
இந்நிலையில் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூன்று பேரும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்துள்ளனர். கடந்த சீசன்களை போல் இல்லாமல், இந்த முறை வெளியில் நடக்கும் விஷயங்களை வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடம் வனிதா, கஸ்தூரி போன்றோர் கூறினார்.

என்ன முடிவெடுப்பார்?
அதுபோல் கவினமுடம் அவரது தாய் கைது செய்யப்பட்டது குறித்து தெரிவிக்கப்படுமா? எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி தெரிவிக்கப்பட்டால் கவின் உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா? இல்லை மக்களாக வெளியேற்றும் வரை உள்ளே தான் இருப்பேன் என முடிவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











