Don't Miss!
- News
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அசீமுக்கே அக்காடா நான்.. முதல் நபராக சேவ் ஆன தனலட்சுமி.. பிக் பாஸ் டீம் விளையாடும் மறைமுக கேம்?
சென்னை: அசீம் ஆப்பிள், தயிர் திருடி திங்கிறாரு என மாட்டி விட்டே அவருக்கு முன்பாக இந்த வாரம் சேவ் ஆகி உள்ளார் தனலட்சுமி.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எப்படியாவது கேப்டன் ஆகிவிட வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த தனலட்சுமிக்கு கடைசியில் மிஞ்சியது பீஸ் போன பல்பு மட்டும் தான்.
ஆனால், கடைசியில் அவர் ஒரு வாரமாக பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலனாக தனாவை முதல் நபராக கமல் சேவ் செய்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

கேப்டன் பைத்தியம்
சென்னை: அசீம் ஆப்பிள், தயிர் திருடி திங்கிறாரு என மாட்டி விட்டே அவருக்கு முன்பாக இந்த வாரம் சேவ் ஆகி உள்ளார் தனலட்சுமி.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எப்படியாவது கேப்டன் ஆகிவிட வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த தனலட்சுமிக்கு கடைசியில் மிஞ்சியது பீஸ் போன பல்பு மட்டும் தான்.
ஆனால், கடைசியில் அவர் ஒரு வாரமாக பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலனாக தனாவை முதல் நபராக கமல் சேவ் செய்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

கமலுக்கு வருத்தம்
ரச்சிதா மற்றும் மைனா நந்தினி கிச்சன் டீமை குத்தகைக்கு எடுத்து விட்டனர் என்கிற குற்றச்சட்டை தனா வைத்ததும் கிச்சன் குயின் என அசீம் ரச்சிதாவுக்கு தனியாக பட்டப் பெயரையே வைத்து விட்டார். விக்ரமன் எழுந்து நின்று நான் கிச்சன் டீமுக்கு போக ஆசைப்பட்டேன் அண்ணா என்று சொன்ன பின்பும் தனா விக்ரமன் பெயரை சொல்லாமல் போனதும் கமலுக்கு ரொம்பவே வருத்தமாகி நீங்களும் விக்ரமனுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டீங்களா என கேட்டதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் சேவ்
இந்த வாரம் கேப்டன் பதவி தனக்கு கிடைக்காதது அன்ஃபேர் என தொடுத்த வழக்கு தோல்வியடைந்தாலும், மனம் துவளாமல் தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என போராடிய தனலட்சுமி அசீம் பழங்களையும், தயிரையும் ஆட்டையைப் போடுவதை அம்பலப்படுத்திய நிலையில், இந்த வாரம் அவருக்கு முன்னதாக தனலட்சுமி முதல் நபராக சேவ் ஆனார்.

பிக் பாஸ் டீம் கேம்
போன வாரம் அதிக வாக்குகளுடன் கதிரவன் முதலில் சேவ் ஆனார். அசீம் கடைசி இடத்தில் இருந்தார். இந்த வாரம் தனலட்சுமி முதல் நபராக சேவ் ஆகிறார். அதன் பின்னர் அசீம் சேவ் மூன்றாவதக கதிரவன் சேவ் ஆகிறார். ஒரே மாதிரி ஃபர்ஸ்ட் சேவ் இருந்தால் ஈஸியாக டைட்டில் வின்னரை கெஸ் செய்து விடுவார்கள் என பிக் பாஸ் டீம் கவனத்துடன் கேம் ஆடுகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.