பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத அர்ச்சனா.. ஓடி வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய வினுஷா.. என்ன ஆச்சு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த வாரம் கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவடைகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார். கிராண்ட் பினாலேவை முன்னிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மார்னிங் ஆக்டிவிட்டியின் போது விஜே அர்ச்சனா திடீரென மனமுடைந்து அழுது பேசிய காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த விஜே அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அர்ச்சனா உள்ளே நுழைந்ததும் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். மாயா, பூர்ணிமா, ஐஷு, ரவீனா தாஹா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார் உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக செங்கோடியை உயர்த்தினர். அதன் விளைவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த சமயத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக விஜே அர்ச்சனா மற்றும் விசித்ரா மட்டுமே குரல் கொடுத்தனர். அதன் விளைவாக அவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் திடீரென பெரும் ஆதரவு பெருகியது.

டைட்டில் வின்னர்: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்கிற நிலைமைக்கு இந்த நிகழ்ச்சியை அதன் பின்னர் மாறிவிட்டது. ஒவ்வொரு வாரமும் அர்ச்சனா எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் முதல் நபராக சேவ் ஆகி வந்தார். கடந்த வாரமும் அர்ச்சனா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மாயா மற்றும் அர்ச்சனா இடையே தான் டைட்டிலுக்கு கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டாலும் அர்ச்சனாவுக்கு தான் இந்த சீசன் டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.
கதறி அழுத அர்ச்சனா: இந்நிலையில், வெளியே அத்தனை மக்கள் ஆதரவு இருந்தும் பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கென ஒருத்தரும் இல்லை என மார்னிங் ஆக்டிவிட்டியின் போது புலம்பித் தீர்த்து அர்ச்சனா அழுத காட்சிகள் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆற்றியுள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தனது அம்மா மற்றும் அப்பா மடியில் படுத்து கொண்டு சில நாட்கள் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்றும் தனது லூசுத்தனமான உண்மை முகத்துடன் தன்னை அங்கீகரிக்க கூடியவர்கள் மத்தியில் வாழப் போகிறேன். இந்த பிக் பாஸ் வீட்டில் அப்படி ஒருவர் கூட எனக்கு கிடைக்கவில்லை என கடைசி நேரத்தில் ஓட்டுகளை அல்ல சிம்பதி ஸ்பீச் கொடுத்து விட்டார்.
ஆறுதல் சொன்ன பாரதி கண்ணம்மா: பிக் பாஸ் போட்டியாளராக இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள நிலையில், அர்ச்சனா அழுவதை பார்த்து அவரை தேற்றிய காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகிறது. இந்த வாரம் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் டைட்டில் மற்றும் 50 லட்சம் பணம் கிடைக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











