Maya: செடி வாடினா.. நான் தண்ணீ ஊத்துறேன்.. அர்ச்சனாவுக்காக மாயா வெளியிட்ட பதிவு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் கிராண்டான பைனல் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் டைட்டிலை தட்டித் தூக்கியுள்ளார் விஜே அர்ச்சனா. வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன இவர், டைட்டிலை வென்று சாதித்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியில் அழுமூஞ்சி என்று பெயர் எடுத்த அர்ச்சனா டைட்டில் வின்னரானது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிகழ்ச்சியில் சில வாரங்கள்கூட தாக்கு பிடிக்க மாட்டேன் என்ற நினைப்புடன் தான் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்ததாகவும் ஆனால் நினைத்ததற்கு மாறாக நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி பெற்றதாகவும் அர்ச்சனா நேற்றைய நிகழ்ச்சியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருக்கு ஏறக்குறைய 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து மணி மற்றும் மாயா அடுத்தடுத்த ரன்னர் அப்பாக தேர்வாகியுள்ளனர். கடந்த 100 நாட்களை கடந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்துவந்த இந்த நிகழ்ச்சி தற்போது சிறப்பாக எண்ட் கார்ட் போட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7, கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு, நேற்றைய தினம் பிரம்மாண்டமான இறுதிப்போட்டிகளுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான பைனல் நிகழ்ச்சி நேற்றைய தினம் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டிலை விஜே அர்ச்சனா தட்டித் தூக்கியுள்ளார். இதன்மூலம் டைட்டிலை வென்ற வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
டைட்டில் வென்ற அர்ச்சனா: அடுத்தடுத்த ரன்னர் அப்பாக மணி மற்றும் மாயா இடம்பெற்ற நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை தினேஷ் மற்றும் விஷ்ணு பெற்றுள்ளனர். கடந்த 100 நாட்களை கடந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்துவந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நேற்றைய தினம் நிறைவு பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளராக களமிறங்கிய மாயா நிகழ்ச்சியில் தொடர்ந்து பல என்டர்டெயின்மெண்ட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சனா பேச்சு: இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா, சக போட்டியாளர்களை துவக்கத்தில் இருந்தே பல சந்தர்ப்பங்களில் கடுப்பேற்றி வந்தார். ஆனாலும் ரசிகர்களிடையே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில் டைட்டிலை வென்றுள்ள அர்ச்சனா, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இரு வாரங்கள்கூட நிகழ்ச்சியில் தாக்கு பிடிக்க மாட்டேன் என்று தான் கருதியதாகவும் ஆனால் தற்போது டைட்டில் வென்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா -மாயா நெருக்கம்: நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக எலிமினேட் ஆன நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் மாயா மற்றும் அர்ச்சனா மட்டுமே பெண் போட்டியாளர்களாக இருந்தனர். இதனால் இவர்களது நெருக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து வெளியேறியுள்ள மாயா, தற்போது அர்ச்சனாவிற்கு கூறும்வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள மாயா, அர்ச்சனா நினைத்ததுபோல அவரது வாழ்க்கையில் பூ பூக்கும் என்றும் செடி வாடுவதாக தெரிந்தால் தன்னை கூப்பிடும்படியும் கூறியுள்ளார்.
செடி வாடினா.. மாயா உறுதி: செடி வாடினால் தான் வந்து தண்ணி ஊத்துவதாகவும் மாயா குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்னதாக உறுதி அளித்தபடி அர்ச்சனாவிற்காக தான் எப்போதும் இருப்பேன் என்றும் மாயா தெரிவித்துள்ளார். இதேபோல, தன்னுடைய அடுத்தப்பதிவில் போட்டியாளர்கள் பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, நிக்சன், விஜய், விச்சு மற்றும் அனன்யா ஆகியோரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ள மாயா, நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன் என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்த சந்தோஷத்திற்கும் தன்னை புரிந்துக் கொண்டதற்கும் மாயா மேலும் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











