Bigg boss famous Pradeep: ஜோவிகாவை இழிவுபடுத்தினாரா பிரதீப்.. புலம்ப விட்டுட்டாங்களே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் 63வது நாள் எபிசோட் இன்றைய தினம் நடந்து வருகிறது.

இதையொட்டி விஜய் டிவி அடுத்தடுத்த பிரமோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Bigg boss tamil 7 contestant Pradeep, tweet with Dog makes controversies

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அதிரடியாக களமிறங்கி ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 63வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் நுழைந்த தினேஷ், அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சியை களைகட்டி வருகின்றனர்.

வாரயிறுதி எபிசோட்: வாரயிறுதி நாளான நேற்றும் இன்றும் நிகழ்ச்சியில் பல அதிரடியான விஷயங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதை அடுத்தடுத்த பிரமோக்கள் மூலம் பார்க்க முடிந்தது. முன்னதாக சிறப்பான சம்பவங்களை செய்துவந்த பிரதீப், ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டார். ஹவுஸ்மேட்சிடம் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு பிரதீப்பை வெளியேற்றும் முடிவை கமல்ஹாசன் எடுத்திருந்தார். பெண்களுக்கு பிக்பாஸ் வீட்டில் அவரால் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாக மாயா, பூர்ணிமா உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய பிரதீப் எலிமினேஷன்: இந்நிலையில் பிரதீப்பை எலிமினேட் செய்தது மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக பிரபலங்களும் ரசிகர்களும் களமிறங்கினர். அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதையொட்டி எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. இதையடுத்து நீங்களுமாச்சு உங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியுமாச்சு என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப், தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுவிட்டார்.

நாயுடன் புகைப்படம் வெளியிட்ட பிரதீப்: தொடர்ந்து சமூகவமலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டுள்ளார் பிரதீப். இதனிடையே ஒரு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பிரதீப் பதிவிட்டிருந்தார். கேப்ஷனில் ஜோ ஜோ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் ஜோவிகாவைத்தான் இப்படி பதிவிட்டுள்ளார் என்று கமெண்ட் செய்தனர். நாய்கள் குலைப்பதை போலவும் படங்களை வெளியிட்டிருந்தனர்.

ஜோவிகாவை தாக்கினாரா பிரதீப்?: இதனால் பிரதீப் மறைமுகமாக ஜோவிகா குறித்து கமெண்ட் செய்ததாக கூறப்பட்டு வருவதை தற்போது அவர் மறுத்துள்ளார். நிம்மதியாக ஒரு நாய் போட்டோகூட போட விட மாட்டீங்களா என்றும் அவர் அடுத்த பதிவில் புலம்பித் தள்ளியுள்ளார். எதை கூறினாலும் கடித்து குதறுவதாக வடிவேலுவின் ஜோக் ஒன்றையும் இந்தப் பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இரு நாய்கள் அவரை பாசத்துடன் அட்டாக் செய்வதாக வீடியோவை வெளியிட்டு ராசுக்குட்டி அட்டாக் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X