Bigg Boss Tamil 7: பூர்ணிமாவை பார்த்து அசிங்கமாக பேசிய தினேஷ்.. கிளம்பிய புது பிரச்சனை!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்கள் எல்லை மீறி பேசி வருவதாக சர்ச்சை வெடித்து வருகிறது. தப்பான சிக்னல், பாலியல் தொல்லை, ஓரினச்சேர்க்கை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருவதாக ரெட் கார்டு எல்லாம் கொடுத்து இந்த சீசன் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
நாயே, சேரி, சொருகிடுவேன் என அர்ச்சனாவை பார்த்து நிக்சன் சொன்னது நேற்று பஞ்சாயத்து ஆன நிலையில், ஆட்டிக்கிட்டு வந்துடுவா என தினேஷ் பேசியது புதிய பிரச்சனையை கிளப்பி உள்ளது.

கண்ணியமில்லா கன்டெஸ்டன்ட்: பிக் பாஸ் சீசன் 4ல் அர்ச்சனா பேசும் போது இந்த வீட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறது என்றும் ஆண் போட்டியாளர்கள் அவ்வளவு கண்ணியமாக உள்ளதாகவும் கூறினார். ஆனால், இந்த 7வது சீசனில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெண்களுக்கு பிரதீப் ஆண்டனியால் பாதிப்பு என ரெட் கார்டு தூக்கி வெளியேற்றினர். ஆனால், உள்ளே இன்னமும் பல கண்ணியமில்லா கன்டெஸ்டன்ட் நிக்சனை போல நிறைந்து இருக்கின்றனர்.
அசிங்கமான பேச்சு: கெட்ட வார்த்தை எல்லாம் இந்த சீசனில் சகஜமாகி விட்டது. ஆண் போட்டியாளர்கள் மட்டுமின்றி பெண் போட்டியாளர்களும் அசிங்கமாக பேசி வருகின்றனர். ஆனால், தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி ரீதியில் தான் ஷோ ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆட்டிக்கிட்டு வந்துடுவா: ரச்சிதாவின் கணவர் தினேஷ் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த நிலையில், அவர் ஆம்பளையான்னே சந்தேகமா இருக்கு என ஜோவிகா பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பூர்ணிமாவை பார்த்து தினேஷ் ஆட்டிக்கிட்டு வந்துடுவா என அசிங்கமாக பேசியதாக பூர்ணிமா ஆர்மியினர் கொந்தளித்து வருகின்றனர்.
அதை விட மோசமாக: இதே வார்த்தையை பூர்ணிமாவும் பேசியுள்ளார் என்றும் இதை விட மோசமாக அவர் அசிங்கமாக பேசியுள்ளார் என்றும் இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது என தினேஷ் ரசிகர்கள் சிலர் முட்டுக் கொடுத்து வருகின்றனர். இந்த போட்டியாளர்களை வைத்துக் கொண்டு வார நாட்களில் கமல் படும் பாடு தான் செம ஹைலைட் என ட்ரோல்கள் பறக்கின்றன. இந்த வாரம் யாரும் எலிமினேஷன் இல்லை என்பதால் போட்டியாளர்கள் போடும் சண்டை எல்லாம் கமல் சரியாக விசாரிப்பாரா? என்பதே கேள்விக்குறிதான்.


Click it and Unblock the Notifications











