Bigg Boss Tamil 7: போச்சே.. போச்சே.. போட்ட பிளான் எல்லாம் போச்சே.. வனிதா மகள் வசமாக சிக்கிட்டாங்க!

சென்னை: இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் ஜோவிகா தான் கடைசி இடத்தில் இருந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், வனிதா விஜயகுமாரின் இன்ஃப்ளூயன்ஸ் காரணமாக விக்ரம் இந்த வாரம் வெளியேறப் போவதாக சோஷியல் மீடியாவில் மாறுபட்ட தகவல்களும் வலம் வரத் தொடங்கின.

ஆனால், இன்று பிக் பாஸ் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கடைசியாக கசிந்த தகவலின் படி ஜோவிகா விஜயகுமார் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என தெரிகிறது.

Bigg Boss Tamil 7: Jovika Vijayakumar evicted details leaked now

விக்ரம் தான் வின்னரா?: டைட்டில் வின்னர் தான் என தம்பட்டம் அடித்து வரும் விக்ரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை காலி செய்வதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் வெளியேற போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த சீசன் டைட்டிலை அவர் தட்டித் தூக்கிடுவாரோ என ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இத்தனை பேர் நாமினேஷன்: பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அனன்யா ராவ், மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக மீண்டும் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக ரீ என்ட்ரி கொடுத்த அனன்யாவையும் சிக்கி உள்ளார்.

ஜோவிகா வெளியேற்றம்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் சனிக்கிழமை நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா தான் குறைவான ஓட்டுக்களுடன் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளன.

வனிதாவே விரும்பினாரா?: தனது மகள் ஜோவிகா வீட்டுக்குப் போகணும் என அழ ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வருகிறார். வனிதாவுக்கும் பிக் பாஸ் ரசிகர் ஒருவரால் அடி விழுந்த நிலையில், இந்த ஹேட்ரட் ஆன நிகழ்ச்சியில் இனியும் தனது மகள் இருக்க வேண்டாம் என வனிதாவே முடிவு செய்து கூப்பிட்டுக் கொண்டாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X