ச்சீ.. அதெல்லாம் பண்ணாத.. எல்லை மீறிய நிக்சன்.. பூர்ணிமா சொன்னதை கேட்டீங்களா.. ஐஷு பார்ப்பாங்களா?
சென்னை: ஐஷுவிடம் எப்படி அக்கா தம்பி போல பழக ஆரம்பித்து நிக்சன் எல்லை மீறி பழகி அவரை விளையாட விடாமல் வெளியே அனுப்பினாரோ அதே போல தற்போது பூர்ணிமாவுடனும் அக்கா தம்பி போல பழகி கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்பிடித்து வெண்ணிலவே பாட்டுக்கு ஆட ஆரம்பித்து தற்போது படுக்கையில் என்னவெல்லாம் வேலை செய்கிறார் பாருங்க என பிக் பாஸ் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.
அக்டோபர் 2ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் எண்ட் கேமை சந்திக்க போகிறது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருவார்கள். ஆனால், இந்த முறை ஹோஸ்ட்டையும் மிச்சம் வைக்காமல் ரசிகர்களும் விமர்சகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

நிக்சனை காப்பாற்றிய பிக் பாஸ்: மிக்ஜாம் புயலை காரணமாக வைத்து நிக்சனை பிக் பாஸ் டீம் காப்பாற்றி விட்டது என்றும் கமல்ஹாசன் வினுஷா மேட்டரிலேயே நிக்சனை விளாசாமல் விட்டது தான் இந்த அளவுக்கு அவனது ஆட்டம் அதிகரித்து விட்டது என பிக் பாஸ் ரசிகர்கள் கேவலமாக திட்டி வருகின்றனர்.
ஐஷு வெளியேற காரணம்: ஆரம்பத்தில் ஐஷு அக்கா ஐஷு அக்கா என சொல்லி அவருடன் பழக ஆரம்பித்த நிக்சன் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப வைத்து காதல் வலையில் விழ வைத்து முத்தமெல்லாம் கொடுக்க வைக்கும் அளவுக்கு படு மோசமாக நடந்துக் கொண்டார். காஜி நிக்சன் என ரசிகர்கள் பட்டப் பெயரே வைக்கும் அளவுக்கு படுமோசமாக நடந்துக் கொண்ட நிக்சனை சுரேஷ் தாத்தா செக்ஸன் என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தது எல்லாம் மறக்கமுடியாத சம்பவம். ஐஷுவை விளையாட விடாமல் வெளியேற்றிய நிக்சன் இப்போ பூர்ணிமாவையும் அதே வலையில் விழ வைக்க பிளான் போட்டுள்ளார் என்கின்றனர்.
பூர்ணிமாவுடன் நெருக்கம்: வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு ஆடுவதற்காக பூர்ணிமாவும், நிக்சனும் பண்ண ரிகர்சலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். என்னடா கெமிஸ்ட்ரி இப்படி பக்காவா வொர்க்கவுட் ஆகுதே என்றும் அக்கா அக்கா என மீண்டும் பேசியே நிக்சன் ஐசுவை கவிழ்த்தது போல பூர்ணிமாவையும் கரெக்ட் செய்து விட்டாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அப்படியெல்லாம் பண்ணாத: பூர்ணிமா படுத்துக் கொண்டிருக்கும் படுக்கையில் அவர் அருகே ஒட்டி உரசி உட்கார்ந்துக் கொண்டு பெண்கள், இன்னொரு பெண்களுக்கு தலை கோதி விடுவது போல தலையை கோதிக் கொண்டே விஷ்ணு பற்றி காசிப் பேசி வரும் நிக்சன் காட்சியை ஷேர் செய்த நெட்டிசன்கள் இதெல்லாம் எவ்வளவு கேவலமானது தெரியுமா? என திட்டி வருகின்றனர். அதில், ஒரு கட்டத்துக்கு மேல் தலையில் முடியை பிடித்து இழுத்து நிக்சன் விளையாட, அப்படியெல்லாம் பண்ணாத, நான் உனக்கு பண்ணவான்னு பூர்ணிமா நிக்சன் முடியை பிடித்து இழுக்கும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.
பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கடுப்பு: தொட்டுப் பேசுனா சேஃப்டி, இதே தள்ளி இருந்தா உமனைசர் என்ன மானங்கெட்ட ஜென்மங்களோ இதெல்லாம் என பூர்ணிமா உள்ளிட்ட புல்லி கேங்கை பிரதீப் ஆண்டனி ரசிகர்களும் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், இதையெல்லாம் வீட்டில் இருந்து பார்க்கும் ஐஷுவுக்கு இப்போதான் நிக்சன் தன்னை எப்படி ஏமாற்றினான் என்பதே புரியும் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











