Bigg Boss 7: கமல் வேண்டாம்.. சிம்பு தான் வேண்டும்.. போர்க்கொடி தூக்கிய பிரதீப் ஆண்டனி ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், இனிமேல் அந்த ஷோவை கமல் தொகுத்து வழங்கக் கூடாது என்றும் மீண்டும் சிம்புவே நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ண வேண்டும் என பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரதீப் ஆண்டனியை கமல் வெளியேற்றியது அன்ஃபேர் எவிக்ஷன் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான பிரியங்கா தேஷ் பாண்டே, கவின், பாவனி ரெட்டி, நிவாஷினி மற்றும் சினேகன் உள்ளிட்ட பல தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Bigg Boss Tamil 7: Pradeep Antony fans wants Simbu to host the show instead of Kamal Haasan

கமலுக்கு எதிரான பிரச்சாரம்: மேலும், யுகேந்திரன் மனைவி பெண்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார் என்றால், 16 வயதில் ரேகாவின் சம்மதத்தை வாங்காமல் நடிகர் கமல்ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வியை முன் வைத்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் ரசிகர்களும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடாது என கண்டனத்தை தெரிவித்து ஏகப்பட்ட ட்ரோல்களையும் கமல்ஹாசனின் படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

சிம்பு தான் வேண்டும்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஒரு பூமர் போல செயல்பட்டு வருகிறார் என்றும் அவரது அரசியல் ஆதாயத்திற்காக ஷோவை பயன்படுத்தி வருவது தவறான ஒன்று என்றும் அவருக்கு பதில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்புவே மீண்டும் பிக்பாஸ் தொகுப்பாளராக வரவேண்டும் என பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் #WeWantSTRasHost ஹாஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.

கமல் செய்தது சரிதான் என்றும் இந்த முடிவை அவர் மட்டும் எடுக்கவில்லை, பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் எழுப்பிய குரலின் வழியாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் முதலில் பிக்பாஸ் ஒரு ஸ்கிரிப்ட் ஷோ அதற்கு இவ்வளவு எமோஷனல் ஆக தேவையில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இன்னும் ஒரு வாரத்தில் ஓவியா, ஆரவ், ஆரி அர்ஜுனன், அசீமை போல பிரதீப் ஆண்டனியையும் ரசிகர்கள் மறந்துவிட்டு அடுத்த சர்ச்சை வெடித்தால் அதன் பின்னால் சென்று விடுவார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X