Bigg Boss Tamil 7 Eviction: வேறலெவல் ட்விஸ்ட்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தானாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் 3 பேர் மட்டுமே நாமினேட் செய்யப்பட்ட நிலையில், யார் வெளியேறுவார் என ரசிகர்களே எளிதில் கணித்து வைத்த நிலையில், இந்த வாரம் வெளியேறி இருப்பது யார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இப்படியொரு சீசனை பார்த்தது கிடையாது என ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்லும் அளவுக்கு படுமோசமான சீசனாக இந்த பிக் பாஸ் மாறியிருக்கிறது.
சில தீவிர ரசிகர்களை தவிர்த்து பெருவாரியான மக்கள் இந்த சீசனை பார்க்கவே இல்லை. சென்னை வெள்ளம் வரும் போது எலிமினேஷன் கிடையாது என சொன்னதை போல இந்த வாரம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக் பாஸ் எலிமினேஷன் ஏன் ரத்து செய்யப்படவில்லை என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

3 பேர் நாமினேஷன்: சீட்டு குழுக்கி போடுவது போல இந்த வாரம் வெறும் 3 பேர் மட்டுமே நாமினேட் செய்யப்பட்டது மிகவும் மோசடியான ஒரு விஷயம் என கடும் விவாதத்தை கிளப்பியது. விசித்ரா, ரவீனா தாஹா மற்றும் விக்ரம் உள்ளிட்ட மூன்று பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இதில், யார் வெளியேறுவார் என்கிற கேள்வியே இடம் இல்லாத அளவுக்கு அரம்பத்தில் இருந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்த ஒரு பெயரைத் தான் சொல்லி வந்தனர்.
ரவீனாவை வெளியே அனுப்புங்க: பிக் பாஸ் வீட்டில் இத்தனை வாரங்கள் ரவீனா மணி பின்னாடி சுத்திக் கொண்டே இருந்தாரே தவிர எந்தவொரு வேலையும் செய்யாவில்லை. ரசிகர்களை கொஞ்சம் கூட அவர் என்டர்டெயினே செய்யவில்லை என விக்ரம் ரசிகர்கள் எல்லாம் ரவீனாவை இந்த வாரம் வெளியே அனுப்பி விட வேண்டும் என சோஷியல் மீடியாவில் தீயாக வேலை பார்த்தனர்.
ராஜமாதா எஸ்கேப்: எப்படி இருந்தாலும் ராஜமாதா விசித்ரா இந்த வாரம் அதிக ஓட்டுக்களை அள்ளி முதலிடத்தை பிடித்து விடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்பதால் அவர் கிரேட் எஸ்கேப் ஆகி விடுவார் என நினைத்த விக்ரம் ரசிகர்கள் ரவீனாவை வெளியேற்றி விட்டால், தங்கள் டைட்டில் வின்னர் சேஃப் ஆகி விடுவார் என்றே பக்கா பிளான் போட்டு செயல்பட்டனர்.
குடும்பங்கள் பங்கேற்பு: இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது கூட ரவீனாவின் பெற்றோர்களும் மணியின் பெற்றோர்களும் மாறி மாறி அவன் பின்னாடி நீ ஏன் சுத்துற, அவ பின்னாடி நீ ஏன் சுத்துற இதுக்குத்தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தியா என வெளியே சுற்றியதை எல்லாம் மறந்து விட்டு எழுதிக் கொடுத்ததை பேசுவது போல பேசி போர் அடித்தனர்.
விக்ரம் தான் எலிமினேட்: சென்னை மழையை காரணம் காட்டி நிக்சனை பிக் பாஸ் டீம் சேவ் செய்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி மழையை காரணம் காட்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் விக்ரமை காப்பாற்றுவார்களா என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் இந்த வாரம் விக்ரமை தான் வீட்டுக்கு அனுப்பி விட்டார் கமல்ஹாசன் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் எல்லாருமே வீட்டுக்குத்தான் செல்ல உள்ளனர். டைட்டில் வின்னர் யாரு, பெட்டித் தூக்கப் போவது யாரு என்கிற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











