Archana: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத் தொகையுடன் இத்தனை லட்சம் சம்பளம் பெற்றாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா ரவிச்சந்திரன் தேர்வாகி உள்ள நிலையில், அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும், பரிசுத் தொகையை தாண்டி பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் உள்ளே இருந்ததற்காக அவருக்கு சம்பளமும் வழங்கப்படும் என்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனா அள்ளிய மொத்த தொகை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்டோபர் 2ம் தேதி கிராண்ட் ஓபனிங் டே நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. விசித்ரா, பவா செல்லதுரை, மாயா, மணி, ரவீனா, வினுஷா, நிக்சன், விஜய் வர்மா, விஷ்ணு, ஐஷு, அக்ஷயா உதயகுமார், அனன்யா ராவ், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா விஜயகுமார், பூர்ணிமா ரவி, யுகேந்திரன், சரவண விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்கள் முதல் நாளில் பங்கேற்றனர்.

வைல்டு கார்டு என்ட்ரி: பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி என திடீர் திடீரென வாக்கவும் மற்றும் ரெட் கார்டு வழங்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடு செய்யும் விதமாகவும் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்க வேண்டும் என்பதற்காக சில வைல்டு கார்டு எண்ட்ரிக்களும் உள்ளே வந்தனர். அர்ச்சனா, தினேஷ், கானா பாலா மேலும் எவிக்ட் ஆன அனன்யா மற்றும் விஜய் வர்மா உள்ளிட்டோரும் வைல்டு கார்டாக உள்ளே நுழைந்தனர்.
50 லட்சம் பரிசு: பிக் பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 7வது சீசன் வரை பல ஆண்டுகள் கடந்தாலும், இன்னமும் அந்த பரிசுத் தொகை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சம்பளம் எல்லாம் உயர்ந்து வரும் போது பரிசுத் தொகை மாறவில்லையே என்கிற கேள்விகளும் எழுகின்றன. இந்நிலையில், இந்த சீசனிலும் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்ச்சனா தான் அந்த அதிர்ஷ்டசாலி.

அர்ச்சனா சம்பளம்: 28வது நாள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அர்ச்சனா 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை தாக்குப் பிடித்த நிலையில், மொத்தம் 77 நாட்கள் இருந்துள்ளார். ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக 77 நாட்கள் அவருக்கு 15,40,000 சம்பளமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











