Bigg boss tamil 7: மாயாவைகூட ஒத்துக்கலாம்.. பூர்ணிமா விஷக்கிருமி.. என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் 7 இன்றைய தினம் 88வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ள நிலையில் கடந்த 89 நாட்களாக இந்த நிகழ்ச்சியுடன் ஒன்றியுள்ள ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில் பல வித்தியாசங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புகுத்தினர். இந்த சீசனில் இரு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டிய நிலையில் டபுள் எவிக்ஷன், மிட் வீக் எவிக்ஷன் என அடுத்தடுத்த விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே எவிக்ஷன் அடுத்தடுத்து நிகழ்ந்தன. முதல் போட்டியாளராக குறைவான வாக்குகளை பெற்று அனன்யா எலிமினேட் ஆனார். தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாகவும் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் நுழைந்தார். இருந்தபோதிலும் ரசிகர்களின் கவனத்தை அவரால் ஈர்க்க முடியவில்லை. மீண்டும் எலிமினேட் ஆனார். இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த தினேஷ், அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சியில் அதிகமான கவனத்தை பெற்றனர். நிகழ்ச்சியில் விஷ்ணு மற்றும் மாயா கோஷ்டியிடையே அதிகமான மோதல் காணப்படுகிறது. இதே போல தினேஷ் -விசித்ராவிடையேயும் தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படுகின்றன.

Bigg boss tamil 7 today (29th december 2023) show: Vishnu slams Poornima

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் இரு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட் வீட் எவிக்ஷன் என பல வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீசனையும் வழக்கம்போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், நிகழ்ச்சியில் பிரதீப் எலிமினேஷன் உள்ளிட்டவை மிகவும் அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தின. ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா மீண்டும் வைல்ட் கார்ட் மூலமாக என்ட்ரி ஆனநிலையில், பிரதீப்பிற்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அடுத்தடுத்த விமர்சனங்கள்: இதேபோல பல விஷயங்களில் மாயாவை, கமல்ஹாசன் கேள்விக்குட்படுத்துவதில்லை என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. டைட்டில் வின்னராக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட சரவணன் விக்ரம் கடந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது டிக்கெட் டூ பைனல் டாஸ்க்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த கடினமான டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் செய்ய வேண்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு மற்றும் மாயா கேங்கிற்கு அதிகமான சண்டைகள் வரும்நிலையில், விசித்ரா மற்றும் தினேஷ் இடையிலும் அதிகமான சண்டை சச்சரவுகள் காணப்படுகின்றன.

பூர்ணிமாவை மோசமாக விமர்சித்த விஷ்ணு: இந்நிலையில் இன்றைய தினம் ரவீனா உள்ளிட்டவர்களிடம் பேசிய விஷ்ணு, மாயாவை கூட ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளலாம் ஆனால் பூர்ணிமா மிகவும் மோசமானவர் என்றும் விஷக்கிருமி என்றும் கூறியுள்ளார்.எதனால் இப்படி கூறுகிறீர்கள் என ரவீனா, கேட்க, பூர்ணிமா என்ன குழந்தை என்று நினைக்கிறாயா என்று பதில் கேள்வி கேட்கிறார். தொடர்ந்து தன்னிடம் பூர்ணிமா எந்தவிதமான வம்பும் வைத்துக் கொள்ள மாட்டார் எனவும் அவர் குறித்த பல சீக்ரெட்கள் தன்னிடம் உள்ளதால் அவர் தன்னிடம் வாலாட்ட மாட்டர் என்றும் விஷ்ணு கூறியுள்ளார்.

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்: ரெடி டூ கோ என்று அவர் அடிக்கடி கூறுவதை சுட்டிக் காட்டிய விஷ்ணு, அவர் ஏன் இப்படி கூறுகிறார். நாமினேஷன் வராததால் இப்படி கூறுகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். நாமினேஷன் வந்துவிட்டு இப்படி பேசினால் தான் ஒப்புக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து எவிக்ட் ஆனாலும் தான் பண்ணது வரைக்கும் சூப்பர் ஹாப்பி என்று அவர் கூறுவதையும் சுட்டிக் காட்டிய விஷ்ணு, எல்லாரும் இந்த மனநிலையில்தான் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அனைவரும் இன்னும் சில தினங்களில் வீட்டை விட்டு போகத்தான் போகிறோம் என்று கூறிய விஷ்ணு, மற்றவர்களை குழந்தைகளாக நினைத்துக் கொண்டு பூர்ணிமா செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X