Bigg Boss 7: பிரதீப் சுத்த பொய் சொல்றாரு.. சினிமா ஷூட்டிங்ல அப்படியெல்லாம் நடக்காது.. வனிதா விளாசல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் தனது மகள் உள்ளே போட்டியாளராக உள்ள நிலையில், அவருடன் தொடர்ந்து சண்டை போட்டு வரும் பிரதீப் ஆண்டனியை தற்போது விளாசி வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

அருவி படத்தில் நடித்து அறிமுகமானாவர் பிரதீப் ஆண்டனி. அந்த படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ போலவே நடித்திருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் பசிக்கும் போது புரொடக்‌ஷன் டீமில் சாப்பாடு கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தாராம்.

புரொடக்‌ஷன் டீமில் இருப்பவர்களுக்கு தான் அந்த படத்தின் ஹீரோ என நினைத்துக் கொண்டு சாப்பாடு பரிமாறினர். ஆனால், அங்கே வந்த புரொடக்‌ஷன் மேனேஜர் இவனுக்கு எல்லாம் எதுக்கு சோறு போடுறீங்கனு கேட்க, அதன் பிறகு அந்த செட்ல தான் சாப்பிடவே இல்லை என்று கூறினார்.

Bigg Boss Tamil 7: Vanitha Vijayakumar slams Pradeep Antony for production food talks

பிரதீப் பக்கா கேம் பிளேயர்: பிக் பாஸ் வீட்டில் எப்படி பேச வேண்டும், எப்படி எல்லாம் பொய் சொல்லி ஸ்ட்ராட்டஜி போட்டு இந்த கேமை வின் பண்ணுவது என அனைத்தையும் தெரிந்துக் கொண்டு வெளியே பிஆர் டீமையும் பக்காவாக செட் செய்து வைத்துக் கொண்டு கேம் ஆடி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஜோவிகாவுடன் சண்டை: பிரதீப் ஆண்டனி கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஜோவிகா என பிக் பாஸ் வீட்டில் முக்கால்வாசி பேருடன் சண்டை போட்டு தனது ஹைப்பை ஏற்றி உள்ளார். ஜோவிகாவுடன் பிரதீப் ஆண்டனி சண்டை போட ஆரம்பித்ததில் இருந்தே வனிதா விஜயகுமார் அவரை சோஷியல் மீடியாவில் விளாசி வருகிறார்.

சாப்பாடு பிரச்சனை: ரயில்வேயில் இருக்கும் போது 60 ஆயிரம் சம்பாதித்துக் கொண்டு இருந்தேன். அதையெல்லாம் விட்டு விட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த படத்தில் நான் ஹீரோ கிடையாது. ஆனால், ஹீரோ போன்ற கேரக்டர். சாப்பிடும் போது புரொடக்‌ஷன் மேனேஜர் சொன்ன அந்த ஒத்த வார்த்தையால் அதன் பின்னர் செட்டில் சாப்பிடுவதே இல்லை. சினிமாவில் இப்படி முன்னணி நடிகர்களுக்கும், சாதாரண நடிகர்களுக்கும் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று பேசியுள்ளார்.

பொய் சொல்றார் பிரதீப்: அவரது அந்த பேச்சை ஷேர் செய்த வனிதா விஜயகுமார் பிரதீப் ஆண்டனி மீண்டும் பொய் சொல்லி தனது ஸ்ட்ராட்டஜி விளையாட்டை விளையாடி வருகிறார். சினிமாவில் அப்படி யாருக்கும் பாரபட்சம் பார்த்து உணவளிப்பது இல்லை என வனிதா விளாசி உள்ளார். மேலும், ஃபெப்ஸியையும் டேக் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X