Bigg Boss Tamil 7 Eviction: என்னடா இது டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை?.. இந்த வாரம் எவிக்ஷன் யாரு?
சென்னை: பிக் பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களே ஒரே போரா போகுதுன்னு புலம்ப தொடங்கி உள்ளனர். அந்தளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி படு மொக்கையாக சென்றுக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் எல்லாம் சொன்னது போல பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிக் பாஸ் டீம் மறுத்த நிலையில், அந்த ஷோவை பார்க்காமலே போய் விட்டார்களா? என்றும் தெரியவில்லை.

இந்நிலையில், இந்த வாரம் மொத்த வீட்டையும் காலி செய்து கழுவி துடைத்தாலும் சந்தோஷம் தான் என ரசிகர்கள் இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போறது இவர் தான் என்கிற கணிப்புகள் வெளியாகி உள்ளன.
நாமினேஷன் லிஸ்ட்: போன வாரம் நீங்க பண்ண பஞ்சாயத்தே போதும் என கமல் சாரே அடக்கி வாசிக்க சொல்லிட்டாரா? என்னவோ தெரியவில்லை. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே டல் அடிக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணிசந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஐஷூ வெளியேறிய நிலையில், இந்த வாரம் நிக்சன் நாமினேஷனுக்கு வந்திருந்தால் அவரையும் தொக்காக ரசிகர்கள் தூக்கி அடித்திருப்பார்கள். ஆனால், மிஸ் ஆகி விட்டார். அதே போல மாயாவும் இந்த வாரம் எஸ்கேப்.
சேஃப் ஜோன்: விசித்ராவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. விட்டால் இந்த சீசன் டைட்டில் வின்னரே அவர் தான் ஆவார் என்றும் கூறுகின்றனர். ரவீனா, மணி, பூர்ணிமா, பிராவோ உள்ளிட்ட போட்டியாளர்கள் சேஃப் ஜோனில் தான் உள்ளனர்.
டேஞ்சர் ஜோன்: இந்நிலையில், இந்த வாரம் வெளியேறும் விளிம்பில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் குறைவான ஓட்டுக்களுடம் அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் என மூவருமே டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இதில், டைட்டில் வின்னர் நான் தான் என சொல்லிக் கொண்டிருக்கும் விக்ரம் அதல பாதாளத்தில் உள்ள நிலையில், இந்த வாரம் என்ன ட்விஸ்ட் நடக்கப் போகுது என தெரியவில்லை.

விக்ரமா? கானா பாலாவா?: கானா பாலா மற்றும் விக்ரம் இருவரும் குறைவான ஓட்டுக்களை அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்பில் பெற்றுள்ள நிலையில், இந்த இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறப் போறது உறுதி என்றும் கானா பாலா வயதானவர் என்பதால் அவரை தான் அதிகமாக வெளியே அனுப்புவார்கள் என்றும் டைட்டில் வின்னர் கனவில் மிதக்கும் விக்ரமை இன்னும் கொஞ்சம் நாள் வைத்து செய்வார்கள் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











