Bigg Boss Tamil 8: விஜய் சேதுபதியின் முழுப்பெயர் இதுவா?.. பிக் பாஸ் வாய்ஸ் ஆரம்பமே அசத்திட்டாரே!
சென்னை: விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதிக்கு ஃபயரோட மிகப்பெரிய வெல்கம் கொடுத்து விஜய் டிவி வரவேற்புக் கொடுத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்களுடன் சேர்ந்து நடத்தப் போவதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறியுள்ளார். ராஜாவாக இருப்பேனா? அரக்கனாக மாறிவிடுவேனா என்பது வார இறுதி நாட்களில் நடக்கும் நிகழ்வுகளை பொறுத்து தான் இருக்கும் என்கிற வார்னிங் உடன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை கடவுள் பாதி மிருகம் பாதி போலவே நடத்தப் போகிறார் என்பதை அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டியதையே இத்தனை வருடங்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு முதல்முறை விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டியும் பிக் பாஸ் வாய்ஸ் உடன் அவர் பேசியதும் ரசிகர்களுக்கு புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.
விஜய் சேதுபதியின் முழுப்பெயர்: மீண்டும் அந்த கம்பீரமான விஜய் சேதுபதியின் குரலை கேட்கவே ரசிகர்களுக்கு ஹேப்பியாகி விட்டது. வெல்கம் விஜய் சேதுபதி சார் என்று சொல்லாமல் வெல்கம் விஜய குருநாத சேதுபதி என விஜய் சேதுபதியின் முழுப் பெயரை வைத்து அழைத்தார் பிக் பாஸ். உங்களோட முழுப்பெயரை வைத்து அழைக்கவா? அல்லது சேது சார் என்று ஷார்ட்டாக கூப்பிடவா என பிக் பாஸ் வாய்ஸ் கேட்க என்னோட முழுப்பெயரை சொல்லி அழைத்தால் எபிசோடே முடிந்து விடும் சேதுன்னே கூப்பிடுங்க என்றார்.
பிரம்மாண்டமான பிரச்சனையான வீடு: பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டிய விஜய் சேதுபதி அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை மட்டுமின்றி பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நிச்சயம் இந்த சீசனில் ஏகப்பட்ட தரமான சம்பவங்கள் ரசிகர்களுக்கு வெயிட்டிங் என்றே தெரிகிறது என்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் மறுபடியும் பழைய கோட்டை எல்லாம் அழித்து விட்டு விஜய் சேதுபதி ஆடப் போகும் முதல் சீசனாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டை விட இந்த வீட்டை அழகாக்கப் போகும் போட்டியாளர்களை அடுத்து வரவேற்க ரெடியாகி விட்டார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











