உங்களுக்கு என்ன நான் படுக்கணுமா?.. பிக்பாஸ் 8 இரண்டாவது நாள்.. ஜாக்குலினை வைத்து செய்த சுனிதா

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதன் காரணமாக இந்த சீசன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. முதல் நாளே சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார். அது பலருக்கும் அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நாளின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பிக்பாஸுக்கென்று ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பல பிரபலங்களின் உண்மை முகத்தை தெரிந்துகொள்வதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுவதாக ரசிகர்கள் கூறுவார்கள். இதுவரை 7 சீசன்கள் முடிந்திருக்கின்றன. ஏழு சீசன்களையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். அவருக்கு ஆறு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே சேது பட்டாசாக பேசினார்.

bigg boss 8 vijay sethupathi 8

போட்டியாளர்கள்: பிக்பாஸ் 8ல் தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், ஜெஃப்ரி, நடிகர் விஜே விஷால், முத்துக்குமரன், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஆனந்தி, சத்யா, தர்ஷிகா என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

சாச்சனா எவிக்ட்: இந்த முறை பல ரூல்ஸ்கள் மாறியிருக்கின்றன. அதில் முக்கியமாக முதல் நாளே எவிக்‌ஷன் நடந்தது. அதில் சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார். வீட்டுக்குள் வந்து ஒரு நாள்கூட தங்க முடியாத விரக்தியில் அவர் வெளியேறியிருக்கிறார். அதேபோல் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. போனமுறை ஸ்மால் ஹவுஸ் இருந்தது போல் இல்லாமல் வீடு ரெண்டுபட்டு இருப்பது போட்டியில் மேற்கொண்டு சுவாரசியத்தை கூட்டலாம் என்று நம்பப்படுகிறது.

வைத்து செய்த விஜய் சேதுபதி: முக்கியமாக விஜய் சேதுபதியும் ஃபுல் பார்மில் இருக்கிறார். தொடக்க நிகழ்ச்சியில் ரஞ்சித், அருண் உள்ளிட்டோரை அவர் ஹேண்டில் செய்த விதம் ரசிக்க வைத்தது. அதிலும் ரஞ்சித்திடம் அவர் கவுண்டம்பாளையம் படத்தை வைத்து நிகழ்த்திய உரையாடலும், அவரது நண்பருக்கு கவுண்ட்டர் கொடுத்ததும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இனி வாரா வாரம் விஜய் சேதுபதி எந்த மாதிரியாக பேசுவார் என்று பார்ப்பதற்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

பிக்பாஸ் 8 ப்ரோமோ: இந்நிலையில் பிக்பாஸ் 8ன் இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஏழையின் சிரிப்பில் படத்தில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி பாடலுக்கு போட்டியாளர்கள் நடனம் ஆடுகிறார்கள். அதனையடுத்து பெண்கள் சார்பாக விளையாட ஒருவர் ஆண்கள் வீட்டுக்குள்ளும், ஆண்கள் சார்பாக விளையாட பெண்கள் வீட்டுக்குள் ஆண் ஒருவரும் செல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது தன்னை அனுப்புமாறு ஜாக்குலின் கூறுகிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அதனையடுத்து ஜாக்குலினோ, 'நீங்கள் எப்படியும் என்னை அனுப்ப போறதில்ல. உங்களுக்கு என்ன இப்போ நான் அமைதியா பெட்ல படுத்துக்கணுமா’ என கேள்வி கேட்கிறார். அதற்கு சுனிதாவோ, 'நீங்க வெளியே படுங்க, பெட்ல படுங்க. ஆனா டீமுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்ய முடியும்’ என்று குறிப்பிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X