Bigg Boss Tamil 8: ஆல்யா மானசா முதல் முத்தின கத்தரிக்காய் வரை.. பிக் பாஸ் 8 வீட்டை அலங்கரிக்க ரெடி!
சென்னை: கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இல்லை என்கிற முடிவை எடுத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கப்போவது யாரு என்கிற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
அரவிந்த்சாமி, சூர்யா, சரத்குமார், பார்த்திபன், நயன்தாரா என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் லீக் ஆகின.

அதே போல விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியாகி விட்டார். வரும் வெள்ளிக்கிழமை பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இவிபி பிலிம் சிட்டியில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் உறுதியாக செல்லப் போகும் கன்ஃபார்மான பெண் போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஒரு லிஸ்ட் உலாவி வருகிறது. அந்த லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் அதில், யாரெல்லாம் இந்த வாரம் ஆரம்பமாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஐஸ்வர்யா: சவுண்டு சரோஜாவாக ஆறு படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா இந்த சீசனில் சீனியர் நடிகை கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா மீண்டும் நடிக்க ஆரம்பித்த நிலையில், அவருக்கு தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறுகின்றனர்.

ஆல்யா மானசா: விஜய் டிவி சீரியலில் இருந்து எப்போதுமே பாப்புலரான நடிகை அல்லது தொகுப்பாளினியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புவது வழக்கம். இந்த முறை சீரியல் நடிகை ஆல்யா மானசா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவது உறுதி என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த சீசனில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பூனம் பஜ்வா: பிக் பாஸ் தெலுங்கில் கிரண் பங்கேற்ற நிலையில், தமிழிலும் அவர் பங்கேற்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகைகளாக கலக்கிய மும்தாஜ், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்த பூனம் பஜ்வா இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி ரீல் மகள்: மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த இளம் நடிகை சஞ்சனா நமிதாஸ் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்கப் போவதாக கூறுகின்றனர். கடந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பங்கேற்றதை போல இந்த சீசனில் சின்ன பெண்ணாக சஞ்சனா இடம்பெறுவார் என தெரிகிறது.

சுனிதா கோகோய்: குக் வித் கோமாளியில் கலக்கிய சுனிதா கோகோய் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சித்து +2 படத்தில் அறிமுகமான இவர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்திலும் பள்ளி தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செளந்தர்யா நஞ்சுண்டன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷ்ணுவின் தோழியான செளந்தர்யா நஞ்சுண்டன் இந்த முறை பிக் பாஸ் வீட்டை அலங்கரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திறமையான நடனக் கலைஞரான இவர் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர மேலும், சில சர்ப்ரைஸ் பெண் போட்டியாளர்களும் இந்த சீசனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











