ஆரம்பமே.. மனைவி என மகாலட்சுமியை காட்டாமல்.. ஃபேட்மேன் பார்த்த வேலை.. மகன் என்ன சொன்னார்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் டிடிஎஃப் வாசன், பால் டப்பா, பூனம் பஜ்வா உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் வரப்போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், கடைசியில் அவர்கள் எல்லாம் வீட்டுக்கு வரவில்லை. ஆனால், ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத சர்ச்சை போட்டியாளர் முதல் ஆளாகவே பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
ரவீந்தர் சந்திரசேகர் தனது மைக் டேகிலேயே ஃபேட்மேன் என மாட்டிக் கொண்டு பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரை பார்த்ததுமே ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர். மனைவி என மகாலட்சுமியை காட்டாமல் ரவீந்தர் பார்த்த வேலையை மேடையேறி அங்கேயே கலாய்த்து விட்டார் மகாலட்சுமி.

பிக் பாஸ் வீட்டுக்கு போக வேண்டாம் எனக் கூறியும் என்னுடைய பேச்சை ரவீந்தர் கேட்கவே இல்லை என்றும் விஜய் சேதுபதியிடம் போட்டுக் கொடுத்து விட்டார். அதற்கு மகாலட்சுமி சொன்ன காரணம் தான் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
முதல் போட்டியாளர்: பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே நுழைந்துள்ளார் ஆரம்பத்திலேயே அவருக்கு விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8ன் வெற்றிக் கோப்பை மாதிரியை கொடுத்துள்ளார். இதை பத்திரமாக வைத்து நல்லா விளையாடி கடைசியாக எடுத்து வந்தால் நிஜக் கோப்பையை உங்களுக்குத் தருவேன் என விஜய் சேதுபதி சொல்லி அவரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
மனைவின்னு யார காட்டுற: தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு மகாலட்சுமி திருமணம் செய்துக் கொண்டார். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரவீந்தர் போக வேண்டாம் என சொன்னேன். ஆனால், அவர் தான் அடம்பிடித்து வந்தார் என்றா மகாலட்சுமி. ரவீந்தர் தனது மனைவியை அழைக்கும் போது, எங்கேயோ மொத்தமாக கை காட்ட மேடையேறிய மகாலட்சுமி மனைவின்னு யார கை காட்டுறீங்க என பிக் பாஸ் மேடையிலேயே முறைக்க ஆரம்பித்து விட்டார்.
தண்ணி பாட்டிலை கூட எடுத்து வைக்க மாட்டாரு: பிக் பாஸ் வீட்டுக்கு ஏன் போகக் கூடாதுன்னு சொன்னீங்க என விஜய் சேதுபதி மகாலட்சுமியை பார்த்துக் கேட்க, தன்னுடைய வேலைகளை செய்துக் கொள்ளவே அவருக்கு கஷ்டம். தண்ணி பாட்டிலை கூட எடுத்து வைக்க மாட்டாரு, அதனால் தான் சொன்னேன். ஆனால், அதையெல்லாம் தாண்டி அவர் இந்த முடிவை எடுத்திருப்பது எனக்கு ரொம்பவே ஆச்சர்யம் எனக் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











