Bigg Boss Tamil 8: பிக் பாஸ் ஹோஸ்ட்டாக விஜய் சேதுபதியை பார்க்க திரண்ட மக்கள்.. செம ரெக்கார்டு!
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் பிரம்மாண்ட என்டர்டெயின்மென்ட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது – புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய 'ஆண்கள் Vs பெண்கள்’ தீம் மற்றும் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான போட்டியாளர்கள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, தக் லைஃப் பதில்கள் உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.
மாஸ் காட்டும் மக்கள் செல்வன்: பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான் 18 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் பிக் பாஸை அவர் விடவில்லை. கமல்ஹாசன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக வேறலெவலில் தொகுத்து வழங்கினார். அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் பிசியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஏஐ படிக்கவும் சென்றிருக்கும் கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் யார் வந்தாலும் பிக் பாஸ் போர் அடிக்கும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், மக்கள் செல்வன் வந்து மாஸ் காட்டி வருகிறார்.
ரெக்கார்டு தெறிக்குது: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ன் தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது, நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்கள் டிவியில் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வழியாகவும் பலர் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள்.
• முதல் வாரத்தில் 32 Mn+ பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்தனர்.
• 4.4 Bn+ நிமிடங்கள் (TV + Digital + Hotstar) நேரம் கொண்டாடப்பட்டுள்ளது.
• 162 Mn+ பார்வைகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, தினசரி இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளிக்கலாம்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார். விஜய் சேதுபதி இந்த வார பிரச்சனைகளை எப்படி டீல் செய்யப் போகிறார் என்பதை இன்றைய மட்டும் நாளைய எபிசோடுகளில் காணலாம்.


Click it and Unblock the Notifications











