பிக் பாஸ் வீட்டில் பெண்களை தப்பா பார்த்தாரா ஜெஃப்ரி?.. ஜாக்குலின் ஆரம்பித்த பிளேம் கேம்.. போன சீசன்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் மாயா மற்றும் அவரது கேங் பிரதீப் ஆண்டனி மீது பெண்களுக்கு எதிரான நபர் என்றும் உமனைசர் ரேஞ்சுக்கு அவருக்கு பட்டம் கட்டிய நிலையில், கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனியை வெளியேற்றினார்.
அதன் பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்களும் கமல்ஹாசனின் ஹோஸ்ட் குறித்தும் ட்ரோல்கள் அதிகளவில் கிளம்பின. பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்து தான் கமல்ஹாசனை இந்த சீசனில் தொகுப்பாளர் பதவியில் இருந்து நீக்கவே காரணம் என்றும் கமல்ஹாசனே இனிமேல் அசிங்கப்பட முடியாது என ஒதுங்கி விட்டார் என்றும் ஏகப்பட்ட கதைகள் உலாவி வருகின்றன.

இந்த சீசனில் ஆரம்பத்திலேயே ஜாக்குலின் ஜெஃப்ரி மீது தொடுத்துள்ள இந்த பிளேம் கேமை விஜய் சேதுபதி எப்படி கையாளப் போகிறார் என தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜாக்குலினிடம் சிக்கிய ஜெஃப்ரி: பிக் பாஸ் தமிழ் சீசன் இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என சென்று கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் ஆண்கள் அணியை பெண்கள் பிளேம் கேம் செய்து கடந்த சீசன் போல காலி செய்ய பார்ப்பார்கள் என்றும் அதுதான் அவர்களுடைய பெரிய ஸ்ட்ரட்டஜியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெண்கள் ரூமையே ஜெஃப்ரி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் ஒரு மாதிரி அசிங்கமாக பார்க்கிறான். எங்களுக்கு அன்கம்ஃபர்டபிளாக உள்ளது என ஜாக்குலின் பேசி ஜெஃப்ரியை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்.

பிரதீப் ஆண்டனிக்கு நடந்தது போல: போன சீசன் போல பண்ண பிளான் பண்ணிட்டாங்க கேர்ள்ஸ் டீம் என ரஞ்சித், தீபக், முத்துக்குமரன் என ஆண்கள் அணியில் உள்ள போட்டியாளர்கள் ஜாக்குலினின் தந்திரமான ஆட்டத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த சீசனில் முதல் வாரம் பெண்கள் அணிக்கு சென்ற முத்துக்குமரன் சிக்குவார் என பார்த்த நிலையில், அவர் பெண்களுக்கு சப்போர்ட் செய்து பேசி அல்வா கொடுத்து விட்டார். தற்போது கானா பாடகர் ஜெஃப்ரி சிக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி என்ன பண்ண போறாரு?: கடந்த சீசன் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது கடுமையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், ஆண்கள் vs பெண்கள் என இந்த சீசனே சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் பெண்கள் ஆண் போட்டியாளர்களை அசிங்கப்படுத்தினால் விஜய் சேதுபதி கமல்ஹாசன் போலவே நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தீர விசாரித்து தனது முடிவை அறிவிப்பாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

ஜாக்குலின் ஓவர் ஆட்டம்: கடந்த வாரமே ரவீந்தருக்கு பதில் ஜாக்குலின் தான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் விஜய் டிவி ப்ராடெக்ட் என்பதால் அவரை காப்பாற்றி விட்டனர். அதனை பயன்படுத்தி இந்த வாரம் ஜாக்குலின் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த வாரமும் ஜாக்குலினை சோஷியல் மீடியாவில் அடி வெளுத்து வருகின்றனர். பிரியங்காவுக்கு இருந்தது போல இவருக்கு பெரிதாக ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப்ரி மீது மற்ற பெண்களும் சேர்ந்துக் கொண்டு புகார் சொல்வார்களா? இந்த சீசனில் அவர் தான் பலியாடா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











