அவசரப்பட்ட முத்துக்குமரன்.. அசால்ட்டு காட்டிய விஜே விஷால்.. இத்தனை லட்சம் பணப்பெட்டியை தூக்கிட்டாரே!
சென்னை: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட புதுமையான விஷயங்களுடனும் அதிகப்படியான டாஸ்க்குகளுடனும் அரங்கேறி ரசிகர்களை கவர்ந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மிக்சர் திங்காமல் விளையாட முதல் நாளில் இருந்தே ஆரம்பித்தனர். 24 மணி நேர எவிக்ஷன் என சாச்சனாவை வெளியேற்றி பின்னர் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக அதே வாரத்திற்குள் வீட்டுக்கு அழைத்து வந்ததும் அதே போலத்தான் பணப்பெட்டி டாஸ்க்கிலும் கோல்மால் நடக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களுக்கு இந்த டாஸ்க் செம ட்விஸ்ட்டாகவும் சீட் எட்ஜ் த்ரில்லராகவும் அமைந்தது.
பிக் பாஸ் சீசன் 8 இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். லாஸ்லியா, மாகாபா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்களும் உள்ளே வர ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னர் யார் என்பதை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். கடைசி நேரத்தில் ஜாக்குலின் எவிக்ட் ஆனதும் பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
முதலில் ஓடிய முத்துக்குமரன்: இனிமே யார் ஓடினாலும் அது நீ ஓடிய பாதை என ஆர்ஜே ஆனந்தி பாராட்டும் அளவுக்கு முதலில் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை குறுகிய தூரம் என்றதும் வெறும் 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு முத்துக்குமரன் உஷாராக உள்ளே வந்துவிட்டார். அவரை தொடர்ந்து ரயான் 2 லட்சம் ரூபாய் பணத்தை அதைவிட அதிக தூரம் ஓடி தனது திறமையை பிசிக்கல் டாஸ்க்கில் காட்டி கலக்கினார்.
பவர்ஃபுல் பவித்ரா: பெண் போட்டியாளர்களில் சீன் காட்டிக் கொண்டிருந்த செளந்தர்யா பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியைத் தழுவினார். ஜாக்குலினும் தோற்று வீட்டை விட்டே வெளியேறிவிட்டார். ஆனால், பெண் போட்டியாளரான பவித்ரா ரயான் அளவுக்கு வெறித்தனம் காட்டி 2 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை பெற்றது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
5 லட்சத்தை அள்ளிய விஷால்: இந்த பொங்கல் பண்டிகை விஷால் என பெயர் வைத்தவர்களுக்கு எல்லாம் ஜாக்பாட் தான் போல. தியேட்டரில் விஷால் பல வருடங்கள் முன்னதாக நடித்த மத கஜ ராஜா தாறுமாறாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜே விஷால் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செளந்தர்யா கத்த கத்த உற்சாகம் அடைந்து ஓடி வந்து உள்ளே நுழைந்து கெத்துக்காட்டி விட்டார்.
டைட்டில் யாருக்கு?: அதிக பணத்தை அள்ளிய விஜே விஷால், பணப்பெட்டி டாஸ்க்கில் தோற்ற செளந்தர்யா, செம டஃப் தரும் பவித்ரா, ரயான் மற்றும் முதல் ஆளாக போட்டியில் கலந்துக் கொண்ட முத்துக்குமரன் என இந்த 5 பேரில் யாருக்கு டைட்டில் கிடைக்கும் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும். முத்துக்குமரன், விஷால் மற்றும் செளந்தர்யா ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











