ச்சீ போடி.. அப்பாவை இழுத்து பேசாதே.. தர்ஷிகாவிடம் எகிறிய டெவில் சவுந்தர்யா.. மோசமாகுதே பிக் பாஸ்!
சென்னை: 50 நாட்களுக்கு மேல் மாவாட்டிக் கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காது என வாக்கி டாக்கியில் சொல்லிவிட்டார்கள் போல பிக் பாஸ் டீம் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் கட்டிப் பிடித்து கொஞ்சுவதும், அடிதடி சண்டை வரும் செல்வதுமாக எல்லாமே எல்லை மீறி போக ஆரம்பித்துள்ளது. ரசிகர்களுக்கும் இப்போதான் பாஸ் கன்டென்ட் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க என பிக் பாஸ் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றனர்.
நல்லா கையை தூக்குமா அப்போதான் தெரியும் என தீபக் பேசியதும், நான் ஸ்லீவ்லெஸ் போட்டிருக்கேன் என பவித்ரா ஜனனி மூஞ்சிலேயே அடித்தது போல பதில் சொல்ல அதை அப்படியே டபுள் மீனிங் கன்டென்டாகவே நெட்டிசன்கள் மாற்றிவிட்டனர்.

ஜாக்குலின், சவுந்தர்யா எல்லாம் ஜெஃப்ரியை தம்பி என சொல்லி சொல்லியே கட்டிப் பிடித்து கட்டிலில் புரள்வது எல்லாம் ப்ரோ இட்ஸ் ராங் ப்ரோ என சீமான் வசனத்தை போட்டு ட்ரோல் செய்து வரும் நிலையில், இன்று வெளியான புதிய ப்ரோமோவில் மீண்டும் சவுந்தர்யாவின் சவுண்ட் அதிகரித்துள்ளது.
ச்சீ போடின்னு சொல்லாத: ஸ்கூல் டாஸ்க், பொம்மை டாஸ்க் முடிந்த நிலையில், அடுத்ததாக ஏஞ்சல்ஸ் vs டெவில் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. சவுந்தர்யா ஜாக்குலின் டீமுடன் ஐக்கியமாகி விட்ட நிலையில், தர்ஷிகாவுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. “ச்சி போடின்னு” ஜாக்குலின் தர்ஷிகாவை பார்த்து திட்டிவிட, “ச்சி போடின்னு சொல்லாத” என தர்ஷிகா ஜாக்குலினை பார்த்து எகிறுகிறார். மேலும், இடையே சவுந்தர்யா வர உன் ஃபிரெண்ட் இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லு என சவுந்தர்யாவிடமும் சண்டை பிடிக்கிறார் தர்ஷிகா.
அப்பாவ இழுத்து எப்படி பேசுவ: அப்படி தான் டி பேசுவேன் என ஜாக்குலின் தர்ஷிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க, இது என்ன உன் அப்பன் வீடா இப்படி பேசுற என தர்ஷிகா வாய் விட, சவுந்தர்யாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. ஜாக்குலினோட அப்பாவை எல்லாம் எதுக்கு இழுத்து பேசுற என இதுதான் சான்ஸ் என வேறலெவலில் டெவில் பர்ஃபார்மன்ஸை செய்துள்ளார் சவுந்தர்யா. அதன் காட்சிகளை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் விஜய் சேதுபதி மண்டையை பிய்த்துக் கொண்டு ஓடப் போகிறார் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











