சண்டை எல்லாம் போடுறோம்.. இப்போவாவது பாருங்க.. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பொம்மலாட்டம்!
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 7 சீசன்களும் சும்மா ஃபயராக இருந்து வந்த நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி போலவே உப்பு சப்பு இல்லாமல் மாறிவிட்டதாக ரசிகர்கள் அந்த பக்கம் போகாத தம்பி என விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வசனத்தையே போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.
ஸ்கூல் டாஸ்க் ட்ரை பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்லை என நினைத்த பிக் பாஸ் டீம் அடுத்ததாக பொம்மை பொம்மை பொம்மை பார் என்பது போல மீண்டும் பொம்மை டாஸ்க்கை கொடுத்து சண்டையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

ஜாக்குலின் அவசரத்தில் பேன்ட்டிலேயே பிஸ் அடித்து விட்டார் என சோஷியல் மீடியாவில் சிலர் கிளப்பி விட என்னடா நடக்குது அங்க என ரசிகர்களும் கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பித்த நிலையில், சண்டை டிராமாவை ராணவ் மற்றும் ரயானை வைத்து அரங்கேற்ற முறைப்பதை எல்லாம் தாண்டி அடிக்கவே ஆரம்பித்துவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை: பிக் பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போ பொங்கல் வரும் எண்ட் கார்டு போடுவாங்க என்கிற ரேஞ்சுக்கு இந்த சீசன் மக்களை ரொம்பவே சோதித்து விட்டது. ஆரம்பத்தில் போட்டியாளர்களின் ஆட்டத்தை பார்த்து சப்போர்ட் செய்த ரசிகர்கள் 20 நாட்களுக்குப் பிறகு எல்லாருமே டயர்ட் ஆகி இதுக்கு மேல நடிக்க முடியாதுடா சாமி என்கிற நிலையில் சர்வத்தை அடக்கிக் கொள்ள தற்போது மீண்டும் போட்டியாளர்களை முடுக்கி விட்டு சண்டையே வெடித்துள்ளது பிக் பாஸ் வீட்டில்.
சூடு பறக்கும் பொம்மை டாஸ்க்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போது இந்த பொம்மை டாஸ்க் வந்தாலும் ஆண், பெண் என பார்க்காமல் ஒருவர் மீது ஒருவர் கட்டிப் புரண்டு பொம்மையை எடுப்பதில் மட்டுமே குறியாக உள்ள நிலையில், பல பிரச்சனைகளும் வெடிக்கும் என்பது இயல்பான ஒன்றாகவே மாறியுள்ளது. 6வது சீசனில் தனலட்சுமி தன்னை அசீம் தப்பாக தொட்டுவிட்டார் என பொம்மை டாஸ்க்கில் தான் பிரச்சனை செய்தார். இந்நிலையில், இந்த சீசனில் ரயான் மற்றும் ராணவ் இடையே மோதல் உருவாகி உள்ளது.
என்ன பாஸ் அடிச்சிக்கிறாங்க: வெறும் வாய் சவடால் எல்லாம் விட்டு முறைத்துக் கொண்டே ஷோ நடத்த இது ஒன்றும் ஆரி மற்றும் பாலா விளையாடிய 4வது சீசன் இல்லை என பிக் பாஸ் டீம் சொன்னதா என்னவோ தெரியவில்லை. கொஞ்சம் கைகலப்பு ரேஞ்சுக்கு 8வது சீசனில் ராணவ் மற்றும் ரயான் அடித்துக் கொண்ட காட்சிகள் தற்போது புரமோவாக வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
ரசிகர்கள் அதிகரிப்பார்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சண்டை இல்லாமல் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என கேம் சென்றது தான் அந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யம் ரசிகர்களுக்கு குறையவே காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பின்னர் தான் நிகழ்ச்சி சூடு பிடித்தது. இந்நிலையில், இந்த சீசனில் இந்த சண்டைக்குப் பிறகாவது சூடு பிடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











