Bigg Boss 8: தர்ஷா சாபம் சும்மா விடல.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறியுள்ளார் என்கிற தகவல் லீக்காகிவிட்டது. விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் இன்று நடைபெற்றது. ஏற்கனவே இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்து வந்த ஒரு நபர் கடைசி நேரத்தில் தப்பித்த நிலையில், மற்றொரு போட்டியாளர் வெளியேறியுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சூப்பராகவே தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் எல்லாம் போட்டி போட்டு ரசிகர்களை இதுவரை இல்லாத அளவுக்கு என்டர்டெயின் செய்து வருகின்றனர். ஆனால், அதுவே ரசிகர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.

வீட்டில் பெரிதாக ரியாலிட்டியான சண்டை ஏதும் நடக்காமல் வெறுமனே போட்டிகள் மற்றும் பர்ஃபார்மன்ஸ்கள் மட்டுமே நடைபெற்று வருவதால் இந்த நிகழ்ச்சி இன்னொரு சீரியலாக மாறிவிட்டது என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்கின்றனர்.
நாமினேட் ஆனவர்கள்: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 9 பேர் நாமினேட் ஆனார்கள். ஜெஃப்ரி, சுனிதா, பவித்ரா, அன்ஷிதா, சத்யா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள். முத்து, ஆர்ஜே ஆனந்தி, சாச்சனா, சவுந்தர்யா, விஜே விஷால் உள்ளிட்டோர் நாமினேட் ஆகவில்லை.
முதலிடத்தில் ஜெஃப்ரி: சவுந்தர்யா நாமினேட் ஆகாத நிலையில், அவருக்கு பதில் அதிக ஓட்டுக்களை அள்ளி ஜெஃப்ரி ஆஃப்லைன் ஓட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார். வீக் பர்ஃபார்மர் என இன்விசிபிளாக ஜெஃப்ரியை பிக் பாஸ் போட்டியாளர்கள் மாற்றினாலும் முதல் நபராக இந்த வாரம் அவர் சேவ் ஆகி மற்ற போட்டியாளர்களின் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்.
டேஞ்சர் ஜோனில் யாரெல்லாம்: பவித்ரா, அன்ஷிதா மற்றும் சுனிதா ஆகிய 3 பேர் தான் குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஃப் லைன் ஓட்டிங்கிலும் அவர்கள் தான் அடிவாங்கியுள்ளனர். சுனிதா இந்த வாரம் நாமினேட் ஆனதுமே அந்த சூனியக்காரியை வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், விஜய் டிவி எப்படியும் சேவ் செய்து விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சுனிதாவுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்து விட்டது.
அன்ஷிதா அவுட்: அர்னவை தொடர்ந்து அவரது காதலி அன்ஷிதா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் தர்ஷா குப்தாவுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்காமல் அவர் அவுட் ஆனார். இந்த முறை அதே போல நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்ததால் சுனிதா தப்பித்துக் கொள்ள அன்ஷிதா வெளியேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தர்ஷா சாபம்: வரிசையாக இனிமேல் ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் வெளியே வருவீங்க என தர்ஷா குப்தா சாபத்தை கொடுத்து விட்டு சென்ற நிலையில், ஆண் போட்டியாளர்கள் தப்பித்துக் கொண்டு பெண் போட்டியாளர்கள் வரிசையாக அதுவும் சுனிதாவின் கைப்பாவையாக இருந்து வந்த அன்ஷிதாவே வெளியேறி உள்ளதை பார்த்த தர்ஷா குப்தா ரசிகர்கள் தர்ஷா சாபம் சும்மா விடலை என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











