BB8: VJS ஃபையர் மோட்.. ஆட்டிடியூட் காட்டிய அன்ஷிதா.. வெச்சு விளாசிய விஜய் சேதுபதி.. தரமான செய்கை!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை வார நாட்களில் ரசிகர்கள் அதிகம் பார்க்கின்றார்களோ இல்லையோ, வார இறுதியில் விஜய் சேதுபதிக்காகவே நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதற்கு காரணம், விஜய் சேதுபதி போட்டியாளர்களை அணுகும் முறை. போட்டியாளர்கள் தவறு செய்யும்போது அவற்றை பூசி மொழுகாமல், நேரடியாக கூறுவதன் விளைவாக, ஆட்டத்தில் சூடுபிடித்துவிடுகின்றது. இதன் காரணமாகவே வார இறுதி நாட்களில் பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள். அப்படியான ரசிகர்களின் ஆவலுக்கு நேற்றைய எபிசோட் தரமான சம்பவம்தான் என்று கூறவேண்டும்.
போட்டியாளர் அன்ஷிதா, பிக் பாஸ் வீட்டில் இருக்கக்கூடிய மிகவும் சாதூர்யமான போட்டியாளர்களில் ஒருவராக இவர் உள்ளார். கடந்த வாரத்திற்கு முன்னர் வரை, சின்னச் சின்னத் தவறுகள் செய்திருந்தாலும் அவையெல்லாம் பெரும் கவனத்தையோ, வீட்டில் உள்ள சக போட்டியாளர்களின் மனதில் கசப்பையோ உருவாக்கவில்லை. இதனால், அன்பானவர் அன்ஷிதா என்ற, பேச்சு சக போட்டியாளர்கள் மத்தியிலேயே இருந்தது. அன்ஷிதாவுக்கு வீட்டில் மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் என்றால், அது சுனிதா, ஆனந்தி ஆகியோர்தான். இவர்களும் வெளியேறிவிட்டதால், அன்ஷிதா போட்டியை தனது சொந்த சிந்தனையில் சிறப்பாகவே விளையாடி வந்தார்.

ஆனால் கடந்த வாரத்தில் அன்ஷிதா போட்டியை விளையாடிய விதம், சக போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்குமே பிடிக்காமல் போனது. இது தொடர்பாக விஜய் சேதுபதி கேள்வி கேட்பாரா? அப்படிக் கேள்வி கேட்டால் அது சனிக்கிழமை கேட்பாரா? அல்லது ஞாயிற்றுக்கிழமை கேட்பாரா என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

ரசிகர்கள் ஆர்வம்: ஆனால் சனிக்கிழமையே அன்ஷிதாவின் ஆட்டம் மீதான விமர்சனங்களை விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். பிரிக்ஸ் டாஸ்க்கில் பிக் பாஸ் தரப்பில் கூறப்பட்ட விதிகளைக் கடந்தும், போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசி, கூடுதலாக இரண்டு விதிகளைப் பின்பற்றவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டார்கள். அது, யாராவது வலிக்கின்றது எனக் கூறினாலோ, அடிபட்டுவிட்டது என்றாலோ அப்போதே ஆட்டத்தை நிறுத்தவேண்டும். நிலமை சீரான பின்னர் ஆட்டம் எங்கு விடப்பட்டடதோ அங்கிருந்து தொடர வேண்டும்' என்பதுதான் அது.

அன்ஷிதா செய்த தவறு: இந்த விதியைத் தெரிந்து கொண்ட அன்ஷிதா, விதியை பின்பற்றவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, தனது விதிமீறலைக் ஒப்புக் கொள்ளாமல், நியாப்படுத்தி வந்தார். இது ரசிகர்களுக்கும் ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதிக்குமே அயற்சியைக் கொடுத்தது. இதுமட்டும் இல்லாமல், டாஸ்க் விளையாடும்போது, அன்ஷிதா அணிக்கு ஆதரவாக, அருண் மற்றும் விஷ்ணு செயல்பட்டது மட்டும் இல்லாமல், ஜாக்குலின் அணியை தாக்கவும் செய்தார்கள். இதனை நியாப்படுத்தும் அன்ஷிதா, அருண் மற்றும் விஷ்ணு அணி டாஸ்க்கில் இருந்து வெளியேறிய பின்னர், அன்ஷிதா அணியை மற்ற அணியினர் அட்டாக் செய்தனர். அப்போது அன்ஷிதா, தங்களுக்கு நடப்பது அநியாயம் என முறையிட்டார்.

கடுப்பான சேதுபதி: இது தொடர்பாக விஜய் சேதுபதி கேள்வி கேட்டபோது, அன்ஷிதா ஆட்டிடியூட் காட்ட, விஜய் சேதுபதி கோபமடைந்துவிட்டார். "நீங்களே சொல்லுங்களேன், நீங்கள் செய்வது சரியா? ஒரு விஷயத்தை விவாதிக்கின்றோம் என்றால் அது, புரிந்து கொள்வதற்காகத்தான். இங்கு இருந்து கொண்டு, பிடிவாதமாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை. அதனை இப்படி வெளிக்காட்டியும் பயன் இல்லை. ஆட்டத்தை பார்த்தால்தான் நாங்கள் கேள்வி கேட்கின்றோம். அதை நியாப்படுத்துவது எப்படி சரி" எனக் கேட்டார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.



Click it and Unblock the Notifications











