என் மூத்தப்பிள்ளையே நீங்க தான்.. விஜய் சேதுபதியை உச்சிமுகர்ந்த முத்துக்குமரன் அம்மா.. அசத்திட்டாங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ரொம்பவே புதுமையாக ரசிகர்களுக்கு அமைந்திருந்தது. 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் கிராண்ட் ஃபினாலேவில் இல்லாமல் இந்த சீசன் ஹோஸ்ட்டான விஜய் சேதுபதி மேடையில் நின்றுக் கொண்டு சவுந்தர்யா மற்றும் முத்துக்குமரன் கைகளை பிடித்து நிற்கும் போதே வித்தியாசம் தெரிந்தது.

இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பெண் போட்டியாளர்கள் செம டஃப்பான போட்டியாளர்களாக களமிறங்கிய நிலையிலும், டைட்டிலை ஆண் போட்டியாளரான முத்துக்குமரன் தட்டித்தூக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் ஆண்கள் தான் டைட்டில் வின்னராக உள்ளனர். 2வது சீசனில் ரித்விகாவும் 7வது சீசனில் டைட்டிலை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா தட்டிச் சென்றார்.

bigg boss tamil 8 muthukumaran vijay sethupathi 8


பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தான் வருவார் என்பது முதல் நாளில் இருந்தே தெள்ளத் தெளிவாக தெரிந்த நிலையில், தொடர்ந்து தன்னை நிகழ்ச்சியில் தக்க வைத்துக் கொண்டு டைட்டிலை தட்டித் தூக்கினார். மேடையில் ஏறிய முத்துக்குமரனின் அம்மா அவருக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய பின்னர் விஜய் சேதுபதியை பார்த்து நீங்க தான் என் மூத்தப்பிள்ளை என பேசியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இனிமே பயப்படாம வருவாங்க: கிராமத்தில் இருந்து வந்த என் புள்ள முத்துக்குமரனே பிக் பாஸ் டைட்டிலை வென்ற நிலையில், இனிமேல் இந்த நிகழ்ச்சி குறித்து எந்தவொரு நெகட்டிவ் கருத்து வந்தாலும் அனைவரும் பயப்படாமல் போட்டி போட தைரியமாக வருவார்கள் என மேடை மீதேறி பேசிய முத்துக்குமரனின் அம்மா மைக் பிடித்து பேசியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதைவிட ஒரு அம்மாவுக்கு என்ன வேண்டும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மூத்தப்பிள்ளை: முத்துக்குமரன் சிறு வயது முதலே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து பேசக் கற்றுக் கொண்டான். பலருக்கு பாடமும் எடுத்துள்ளான். ஆனால், எனக்கு பேசவே தெரியாது. நான் ஏதோ சொன்னதை வைத்து அம்மா நீங்க நல்லா பேசுறீங்க என விஜய் சேதுபதி தான் என்னை ஊக்கப்படுத்தி பேச வைத்தார். நீங்கதான் என்னோட மூத்தப்பிள்ளை என மேடையில் விஜய் சேதுபதியை உச்சி குளிர முத்துக்குமரன் அம்மா பாராட்டியதும் மக்கள் செல்வன் நெகிழ்ந்தே போய்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X