Bigg Boss Tamil 9: ரெட் கார்டு.. பாரு, கம்முவை வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி.. மீனவ பொண்ணும் அவுட்!

சென்னை: முதல் முறையாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். படையப்பா படத்தில் வரும் கிணறு திறக்கும் சீன் போல பிரதீப் ஆண்டனியை தொடர்ந்து தற்போது மீண்டும் ரெட் கார்டு கொடுத்து முதல் முறையாக ஜோடியாக இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. உமன் கார்டை பயன்படுத்தி மாயா டீம் அவரை வெளியேற்றியதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், இன்று பாரு மற்றும் கம்ருதீனை ரெட் கார்டு கொடுத்து விஜய் சேதுபதி வெளியே அனுப்பிய நிலையில், ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Bigg Boss Tamil 9 2 Red Card and 1 Eviction this week at Bigg Boss show
Photo Credit:

காதல் கன்டென்ட்டை வைத்து இந்த சீசனை கடத்தி விடலாம் என சில போட்டியாளர்கள் நினைத்தனர். காதலை தாண்டி காமத்தையும் ஆபாசத்தையும் காட்டி நிகழ்ச்சியில் தொடர நினைத்த நிலையில், வயலென்ஸ் காரணமாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு விட்டது.

வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி: பார்வதி உங்களை உங்கம்மா வீட்டுக்கு போனதும் பாராட்டுவாங்க என்றும் கமருதீன் உங்க வீட்டில் உங்களை தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. ஒரு ஷோவில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூட தெரியாத என விளாசி எடுத்தார் விஜய் சேதுபதி. அவருக்கு முன்பாகவே திவ்யா கணேஷிடம் பாரு எகிறிய நிலையில், இதுக்கு மேல நீங்க இருக்க வேண்டாம் என ரெண்டு ரெட் கார்டை காட்டி உடனடியாக அனுப்பிவிட்டார்.

அசிங்கத்துடன் எலிமினேட்: இதுவரை இல்லாத அளவுக்கு பாரு மற்றும் கம்ருதீன் இருவரும் அசிங்கத்துடன் எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டனர். விஜய் சேதுபதி அவர்களை மேடை ஏற்றிக் கூட பேசவில்லை. அப்படியே போய்விட்டார். திவ்யா கணேஷ் பார்வதியிடம் நீ பண்ண தப்புக்குத்தான் அனுபவிக்கிற, அப்படியே வெளியே போயிடு என விரட்டி அடித்து விட்டார். விக்கல்ஸ் விக்ரம் கதவு தொறந்துட்டாங்க கிளம்பு என்று சொன்னதும் ரசிகர்கள் ஒரே கைதட்டல் தான். நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த பலரும் உற்சாகத்தில் எகிறி குதித்து கொண்டாடினர்.

சுபிக்‌ஷாவும் அவுட்: சனிக்கிழமை பார்வதி மற்றும் கமருதீன் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீனவ பொண்ணு தவெக சப்போர்ட்டர் சுபிக்‌ஷா இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அரோரா, சபரி, திவ்யா கணேஷ், கானா வினோத் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் தான் இறுதிப்போட்டியாளர்களாக மாறியுள்ளனர். இதில், பெட்டியை தூக்கிக் கொண்டு அரோரா ஓடுவாரா? அல்லது டைட்டிலை வெல்வாரா? சபரிக்கு டைட்டில் கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X