Bigg Boss Eviction: வெளியேறிய தர்பூசணி திவாகர்.. அச்சச்சோ இனி பார்வதி யாருகிட்ட புலம்புவாங்க?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்துடன் மொத்தம் 6 வாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த வாரத்திலும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் சனிக்கிழமை எபிசோடில் கனி திரு வெளியேற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தர்பூசணி திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கனி திரு வெளியேறியது பலருக்கும் ஷாக் கொடுத்த நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டது, பார்வதிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 6th Week Eviction Watermelon Star Diwakar Eliminated Sunday Episode VJ Parvathy Getting Shock
Photo Credit:

இந்த சீசனின் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் தர்பூசணி திவாகர். இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்ததன் மூலம் பிரபலமானவர். அடிப்படையில் பிசியோ தெரபி மருத்துவரான இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், ரசிகர்களைக் கவர வேறு ஏதாவது சில திறமைகளை வெளிப்படுத்துவார் என்று பார்த்தால், தான் ஏற்கனவே சமூக வலைதளங்களில் என்னவெல்லாம் ரீல்ஸ் செய்து கொண்டு இருந்தாரோ, அதையேதான் கடந்த 6 வாரங்களாக செய்து கொண்டு இருந்தார். பெரும்பாலும் பார்வதி சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டு இருந்தார். எந்த டாஸ்க் வைத்தாலும் பார்வதி சொல்வதையே பிரதானமாக செய்து வந்தார். அப்படியான திவாகர் 6வது வார இறுதியில் வெளியேறிவிட்டார்.

தலையாட்டி பொம்பை: இந்த சீசனில் களமிறங்கி ரசிகர்களை டார்ச்சர் செய்த போட்டியாளர்களில் தர்பூசணி திவாகரும் ஒருவர். வேண்டுமானால் தர்பூசணி திவாகரை டார்ச்சர் பட்டியலில் இரண்டாவது இடத்திலோ, மூன்றாவது இடத்திலோ வைக்கலாம். அந்த அளவுக்கு, இவரது ஆட்டமும், பேச்சும், நடவடிக்கைகளும் இருந்தது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவராக வி.ஜே. பார்வதியைச் சொல்லலாம். தற்போது தர்பூசணி திவாகர் வெளியேற்றப்பட்டுவிட்டதால், இனி அந்த வீட்டில் பார்வதி சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு, கண்மூடித் தனமாக பேசுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இது மட்டும் இல்லாமல், பார்வதி தான் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிப் புலம்புவதே திவாகரிடம் தான் என்பதால், இனி திவாகரும் இல்லை எனும்போது பார்வதி யாரிடம் சொல்லிப் புலம்புவார் என்பது குறித்து ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X