ஆதிரை தான் எங்கிட்ட கிஸ் கேட்டா.. இது லவ் தான ஜெஸி என போட்டு உடைத்த FJ.. மத்தியஸ்தம் செய்யும் அரோரா

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தோடு சேர்த்து 10 வது வாரம் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் தரப்பில் ரசிகர்களுக்கு பல அதிரடி சர்ப்ரைஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டிற்குள் போட்டியாளராக களமிறக்கப்பட்ட ஆதிரை,இந்த சீசனின் மூன்றாவது வாரத்திலேயே எலிமினேட் ஆனவர். இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் மீண்டும் அவர் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அவர் வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் ஒரு காரணம் FJ உடனான நெருங்கிய பழக்கம் என்றும் ரசிகர்களால் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆதிரை மீண்டும் வீட்டிற்குள் வந்ததும் FJ கொஞ்சம் அரண்டு போய் விட்டார். அது அவரது முகத்தில் நன்றாகவே தெரிந்தது. ஆதிரை உள்ளே வந்ததில் இருந்து மூவர் மீது தொடர்ந்து அட்டாக் மோடில் உள்ளார். அதில் முதலாவது நபர் FJ. அதற்கு காரணம் ஆதிரை வீட்டிற்குள் இருந்த மூன்று வாரத்தில் FJ உடன் நெருங்கிப் பழகினார். அப்போது மற்ற போட்டியாளர்கள் சிலரிடம் ஆதிரை தன்னிடம் நெருங்கிப் பழகுகிறார், ஆதிரை என்னை காதலிக்கிறார் என்று எல்லாம் கூறியுள்ளார். இதை மூன்றாவது வாரத்தில் வெளிவந்த ஆதிரை எல்லா எபிசோட்களையும் பார்த்து அதிர்ச்சி ஆகியுள்ளார்.

Bigg Boss Tamil 9 Aadhirai Asked Kiss FJ Told To Aurora Sinclair Fans Shocking Reaction

ஆதிரை: இந்நிலையில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கி உள்ள ஆதிரை, நீ என்னை மிஸ் யூஸ் செய்துவிட்டாய், உன்னை சும்மா விடமாட்டேன் என்று முடிவெடுத்து FJ-வை தொடர்ந்து அட்டாக் செய்து வருகிறார். இப்படி இருக்கும்போது ஆதிரை மற்றும் FJ இணைந்து தங்களுக்கு இடையிலான பிரச்னையை பேசுகிறார்கள். இதில் மத்தியஸ்தம் செய்து வருகிறார் ஆதிரை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காதலா: இப்படி இருக்கும்போது FJ பேசும்போது, ஆதிரை தான் என்னிடத்தில் முத்தம் கேட்டாள். என்னிடத்தில் ஒரு பெண் முத்தம் கேட்கும் போது, அதுவும் நெருங்கிப் பழகும் பெண் முத்தம் கேட்கும் போது அதை லவ் என்றுதானே எனக்கு நினைக்கத் தோன்றும். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த ஆதிரை நான் விக்ரமிடமும் தான் கேஷ்வுலகாக ஒரு ஹக் கேட்டேன். அதுபோலத்தான் இந்த முத்தமும் என்று கூறினார். மேலும் ஆதிரை பேசும்போது, அரோரா உன்னிடத்தில் தலை முடி மீதுதானே முத்தம் கேட்டாள், தோலில் முத்தமிடச் சொல்லி கேட்கவில்லை தானே? என்று கேள்வி எழுப்புகிறார்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: இறுதியில் நான் புரிந்து கொண்டது தவறு என்று FJ மன்னிப்பு கேட்கிறார். இவர்களுக்கு இடையில் நடைபெற்றதை பார்த்த ரசிகர்கள், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு கேட்பாரே, இது லவ் தான ஜெஸ்ஸி என்பது போல ஒரு பொண்ணு முத்தம் கேட்டால் அது லவ் தானே என்று FJ நினைத்துக் கொண்டார் போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடச் சென்றீர்களா? இல்லை முத்தம் கேட்டு வாங்கி அதை பஞ்சாயத்து ஆக்கச் சென்றீர்களா என்றும் சில ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X