பார்வதி - கமருதீன் விஷயத்தில் மூக்கை நுழைத்த அமித்.. அடிக்காத குறையாக விளாசிவிட்ட மனைவி சிவரஞ்சனி

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்ட எட்ட தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமான நிகழ்ச்சி பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்வதால் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஒரே கலகலப்பாகவும் எமோஷனலாகவும் உள்ளது. இப்படி இருக்கும்போது போட்டியாளர் அமித் பார்கவ்-இன் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அமித்தின் மனைவி சிவரஞ்சனி தெரிவித்த சில அறிவுரைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவரஞ்சனி மற்றும் அமித் என இருவரும் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் தான். இந்த சீசனில் அமித் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கினார். அவரது ஆட்டம் ரசிகர்கள் பலருக்கும் பிடித்துள்ளது. மேலும் சக போட்டியாளர்களிடம் கூடுமானவரை கடிந்து கொள்ளாமல், அவர்கள் மீதான விமர்சனங்களை வெளிப்படுத்தும் அவரது குணநலன் பலருக்கும் பிடித்துள்ளது.

Bigg Boss Tamil 9 Amit Bhargav Wife Sivaranjani Slams Amit Comment About VJ Parvathy and Kamarudin
Photo Credit:

இந்நிலையில் இந்த வாரத்தில் நடைபெற்று வரும் ஃபேமிலி ரவுண்டில் அமித்தின் மனைவி சிவரஞ்சனியும் அவரது மகளும் சென்றனர். அவரது மகள் முத்தமழை பாடலைப் பாடிய வீடியோ இப்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், கானா வினோத் தான் உனது உண்மையான நண்பன் என்று சிவரஞ்சனி சொன்னதும் கானா வினோத் அழுத காட்சிகளும் ரசிகர்களை மெல்ட் ஆக்கி உள்ளது.

சிவரஞ்சனி: இப்படி இருக்கும்போது, சிவரஞ்சனி அமித்தை நோக்கி எழுப்பிய கேள்விகளும் அவருக்கு அளித்த அறிவுரையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பார்வதி - கமருதீன் இடையிலான உறவு குறித்தும் அவர்களுக்கு அமித் பதிவுத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னது குறித்தும் பேசினார்.

பார்வதி - கமருதீன்: சிவரஞ்சனி பேசுகையில், " பார்வதி - கமருதீனுக்கும் இடையில் இருக்கும் உறவை, அவர்களே வெளியில் ஓபனாக பேசுவது இல்லை. இப்படி இருக்கும்போது நீ எதற்காக அவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறாய்?. நீ யோசி, நம்ம வீட்டு பெண்ணை ஒரு நிகழ்ச்சி அனுப்புகிறோம் என்றால், யாராவது நமது பெண்ணுக்கு பதிவுத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னால், நமக்கு கோபம் வருமா? வராதா? நாம் ஏன் அது எல்லாம் சொல்ல வேண்டும்?

Bigg Boss Tamil 9 Amit Bhargav Wife Sivaranjani Slams Amit Comment About VJ Parvathy and Kamarudin
Photo Credit:

ரசிகர்கள் கவனம்: இங்கு இப்படி இருக்கும், இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் எந்த அளவுக்கு இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது எதற்காக தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X