துஷாருடன் அரோரா எங்க போயிருக்காங்கனு பாருங்க.. வாழ்க்கையை சிறப்பா தொடங்க செம பிளான் தான் போல!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்தது. வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி டைட்டிலை வென்றார் திவ்யா கணேஷ். சபரிநாதன் இரண்டாவது இடம் பிடித்தார். இதில் போட்டியாளர் அரோரா டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று டாப் 4ஆவது போட்டியாளராக உருவெடுத்தார். இந்த சீசனில் இருந்து மிகவும் அழகான காதல் கதையாக துஷார் மற்றும் அரோராவின் காதல் கதை பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் கூட, காதல் கதைகள் இருந்துள்ளது. அதேபோல் இந்த சீசனிலும் காதல் கதைகள் இருந்தது. குறிப்பாக அரோரா - துஷார், அதேபோல் பார்வதி - கமருதீன் மற்றும் ஆதிரை - எஃப்.ஜே. இதில் ஆதிரை எஃப்.ஜே மட்டும் இது காதல் இல்லை என்று தெளிவுபடுத்தினார்கள். இப்படி இருக்கையில் இந்த சீசனில் பலரையும் கவர்ந்த காதல் கதை என்றால் அது துஷார் - அரோரா காதல் கதை தான்.

இருவருக்கும் சீசன் தொடங்கியதில் இருந்தே நல்ல ரேம்போ செட் ஆகிவிட்டது. இருவரும் டாக்ஸ் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றாகவே இருந்தனர். ஒரு கட்டத்தில் துஷார் எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பின்னர் அரோரா தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். இன்னும் சொல்லப்போனால் சக போட்டியாளர்கள் பலரும் துஷார் வெளியேறியதற்கு அரோரா தான் காரணம் என்று தொடர்ந்து குத்திக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.

Bigg Boss Tamil 9 Aurora And Tusar Went Temple With Aadhirai Video Goes Trending

அழகான காதல் கதை: அதே நேரத்தில் துஷார் குறித்து பேசுவது என்பது அரோராவுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்துள்ளது. மேலும் எனக்குப் பிடிச்சவனே என்று துஷாரை நினைத்து பாடல் எல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார் அரோரா. இது ஒரு புறம் இருக்க, நான் டிக்கெட் டூ ஃபினாலே வெல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் பணத்திற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அப்படி நான் நினைத்திருந்தால் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் நான் எனது அன்பிற்குரிய துஷாரை இந்த வீட்டிற்குள்ளேயே சந்திக்க நினைக்கிறேன். அதற்காகத்தான் இந்த ஆட்டத்தில் இவ்வளவு கவனமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் துஷாரை வீட்டிற்குள் சந்திக்கவும் செய்தார்.

கோவில்: இப்படி இருக்கையில் இந்த சீசன் முடிந்த பின்னர் துஷார், அரோரா மற்றும் ஆதிரை என மூவரும் இணைந்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X