கொஞ்சம் மனசு வெச்சு வாங்களேன் ப்ளீஸ்.. குடும்பத்தினரிடம் கெஞ்சும் அரோரா.. புள்ள அழுதுடுச்சுங்க!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் சென்று கொண்டுள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்களான, சான்ட்ரா, சபரி, கானா வினோத், சபரி உள்ளிட்டோரின் குடும்பத்தினர் வந்துள்ளனர். அமித், கமருதீன், கனிதிரு, விக்கல்ஸ் விக்ரம், திவ்யா, சுபிக்‌ஷா உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் வரப்போகிறார்கள். இதில் பார்வதியின் குடும்பத்தினர் 24 மணி நேரம் வீட்டில் தங்கும் வாய்ப்பை பெறவுள்ளனர். அப்படி இருக்கும்போது, போட்டியாளர் அரோரா ஒரு கேமரா முன்பு நின்று கொண்டு பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சீசனில் இரண்டாவது போட்டியாளராக களமிறக்கப்பட்ட போட்டியாளர் அரோரா. இவருக்கு சமூக வலைதளங்களில் இணையவாசிகள் சிலர் இவரை வேறு ஒரு பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். அந்த அடையாளத்தை நீக்கிவிட்டு, பிக்பாஸ் மூலம் தனக்கென தனி அடையாளத்தை, புது அடையாளத்தை அவர் ஏற்படுத்துவார் என்று அவரது தோழி, ரியா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் அரோராவின் சில நடவடிக்கைகள் உள்ளபடியே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. இது பிக் பாஸ் வீடா இல்லை வேறு எதுவுமா என்று எல்லாம் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இப்படி இருக்கும்போது, சுமார் 50 நாட்களுக்குப் பின்னர், அரோரா தனது ஆட்டத்தை மாற்றினார். அதாவது அப்போதுதான் பிக் பாஸ் என்ற கேம் ஆடவே தொடங்கினார். ஆனால் இந்த 30 நாட்களில் அவர் ஏற்படுத்தி உள்ள தாக்கம் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Bigg Boss Tamil 9 Aurora Cried And Begged Her Family For Family Round Video Goes Trending

பாராட்டு: சில வாரங்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அரோராவை வெகுவாக பாராட்டி பெருமை கொண்டார். இப்படி இருக்கும்போது, அரோரா தனது குடும்பத்தினரை பிரிந்து சில ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும்போது, அவருக்கு இந்த வாரமான ஃபேமிலி ரவுண்டில் யார் வருவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே இருக்கிறது. பிக்பாஸ் தமிழ் 3 வது சீசனில் கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி சென்றார். அதேபோல் பல போட்டியாளர்களுக்கு அவர்களின் நண்பர்கள் வந்துள்ளார்கள்.

கண்ணீரில் அரோரா: இதனால் அரோராவுக்கும் அவரது நட்பு வட்டத்தில் இருந்து யாராவது வருவார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அரோரா ஒரு கேமரா முன் நின்று அழும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், " எல்லாருடைய குடும்பமும் வருகிறார்கள், பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எனக்கு குடும்பம் இல்லை. எனது தோழி தான் உள்ளார்.

குடும்பம்: எனது குடும்பத்தினரிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், கொஞ்சம் மனது வைத்து வாங்களேன். அப்பா உங்களை இங்கு பார்க்க வேண்டும் என்று உள்ளது. அம்மா, அக்கா, குழந்தைகள் எல்லாரும் வந்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் மனது வைத்து வாங்களேன். எனது நாய்குட்டியை பார்க்க வேண்டும் என்று கண்ணீருடன் கெஞ்சுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் அரோராவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சில இணையவாசிகள் ஒரு படி மேலே சென்று, அரோராவின் குடும்பத்தினருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X