Bigg Boss: நடிப்பதை விட பெரும் கனவுடன் வெளியேறிய அரோரா.. பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தைகள் ஸ்பெஷல்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று முதல் போட்டியாளராக ஃபினாலேவுக்கு தகுதி பெற்றார். அரோரா எப்படியும் டாப் 2 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அவரது தீவிரமான ரசிகர்கள் அவர் டைட்டிலை வெல்வார் என்றும் நினைத்தார்கள். ஆனால் அவர் டாப் 4 வது போட்டியாளராக வெளியேறி உள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்தாலும், பலரும் அரோராவை கொண்டாடி வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அரோரா வெளியேறும் போது இதுவரை இன்னும் சொல்லப்போனால், இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்கள் என அனைத்திலும் போட்டியாளர்கள் தொடங்கி அனைவரையும் வெளியேற்றும் போதும், இந்த பிக்பாஸ் சீசனில் உங்கள் நேரம் இத்துடன் முடிந்தது, இப்போது நீங்கள் மெயின் டோர் வழியாக வெளியே செல்லலாம் என்று தெரிவிப்பார்.

மாஸாக வழி அனுப்பிய பிக்பாஸ்: ஆனால் அரோரா பிக்பாஸிடம் தனக்கு இந்த வீட்டிற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டாம் என்று கோரிக்கை வைத்ததால், பிக்பாஸ் அதை மாற்றிக் கூறினார். அதாவது வெளியுலக வாழ்க்கைக்கு வாழ்த்துகள், அரோரா காலுக்கு ஒரு ஜூம் வைங்கப்பா" என்று கூறி அரோராவை கெத்தாக வெளி உலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

Bigg Boss Tamil 9 Aurora Evicted as Top 4 Her Speech Attracts Bigg Boss Fans

படிப்பு: அதேபோல் இறுதி மேடையில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. என்னுடைய ஆசை எல்லாம் மிகவும் சின்னது. எனக்கு என்று ஒரு குடும்பம், எனது குழந்தைகள் அவ்வளவுதான். எனது உலகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது குடும்பத்தையும் என்னையும் பார்த்துக் கொள்ள எனது அழகு மட்டும் போதாது. எனவே நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போது ஒரு டிகிரி தான் படித்துள்ளேன். இன்னும் படிக்க வேண்டும். எனது படிப்பை வைத்து எனது எதிர்காலத்தை கட்டமைக்க நினைக்கிறேன். அதற்காகத்தான் பணம் சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார். அரோராவின் இந்த பேச்சு பலருக்கும் பிடித்துப் போனது. இதனால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X