புருஷன் வேண்டாம்.. குழந்தை வேண்டும்.. அரோராவின் ஆசை நிறைவேறுமா.. இவ்வளவு ஓபனாவே சொல்லிட்டாங்களே
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் சென்று கொண்டுள்ளது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். இதில் வி.ஜே. பார்வதியின் குடும்பத்தினர் மட்டும் 24 மணி நேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் தங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இப்படி இருக்கும்போது போட்டியாளர் அரோரா தனக்கு புருஷன் வேண்டாம், ஆனால் குழந்தைகள் வேண்டும் என்று தெரிவித்துள்ள அவரது ஆசை குறித்த பேச்சு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று, பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களில் ஒன்று, அரோரா சக போட்டியாளர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் பலம் மற்றும் அவர்களின் பிளஸ் பாய்ண்ட்கள் குறித்து பேசியதுதான். அதாவது, அரோரா மைக் போடாமல் இருந்ததால், வீட்டுத் தல-யாக உள்ள கமருதீன் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டு, அவர்களின் நல்ல குணத்தை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட அரோரா அனைத்து போட்டியாளர்களையும் சந்தித்து மன்னிப்பு கேட்டு, சக போட்டியாளர்களின் நல்ல குணங்கள், அவர்களின் பிளஸ் பாய்ண்ட்கள் குறித்தும் பேசினார். இதற்கிடையில் கானா வினோத், சாண்ட்ரா, வி.ஜே. பார்வதி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் போது, அவர் பேசியது தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.
குழந்தை வேண்டும்: அதாவது சக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வந்து விட்டு போனதைப் பார்க்கும்போது எனக்கும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் புருஷன் வேண்டாம். புருஷன் இல்லாமல் குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும். குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்றால் கூட நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று அவரது ஆசையை வெளிப்படுத்தினார் அரோரா. இவரது இந்த ஆசையும் அதை அவர் வெளிப்படுத்தியதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்கள் ரியாக்ஷன்: ரசிகர்கள் பலரும், பிக்பாஸ் முடித்துவிட்டு வெளியே வந்து, உங்களது இந்த ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள் என்றும், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் என்ன விதிமுறைகள் விதித்துள்ளதோ, அதற்கு நீங்கள் தகுதியானவர் என்றால் உங்களாலும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











